சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுதந்திரம், குடியரசு நாளை விட ஜிஎஸ்டி நாள் தான் முக்கியமானது... தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பரபர பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: ‛‛நாட்டின் சுதந்திர நாள், குடியரசு நாளை விட மிக முக்கியமான நாள் தான் ஜிஎஸ்டி நாள்'' என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசினார்.

Recommended Video

    சுதந்திரம், குடியரசு நாளை விட ஜிஎஸ்டி நாள் தான் முக்கியமானது... தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பரபர பேச்சு

    இந்தியாவில் கடந்த 2017 ல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் இந்த வரி விதிப்பு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

    8.30 மணி வரை தான் டைம்! திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கெடு விதித்த அமைச்சர் கேஎன்.நேரு! 8.30 மணி வரை தான் டைம்! திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கெடு விதித்த அமைச்சர் கேஎன்.நேரு!

    2017 ஜூலை 1ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஜிஎஸ்டியின் கீழ் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

    ஜிஎஸ்டி நாள் கொண்டாட்டம்

    ஜிஎஸ்டி நாள் கொண்டாட்டம்

    இந்நிலையில், நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப் பெரிய மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 5 ஆண்டுகளை நிறைவுசெய்து 6வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஜிஎஸ்டி கவுன்சில் சார்பாக, தமிழ்நாட்டில் சென்னை கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி நாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    சுதந்திர தினத்தை விட முக்கியமான நாள்

    சுதந்திர தினத்தை விட முக்கியமான நாள்

    நாட்டின் சுதந்திர நாள், குடியரசு நாளை விட மிக முக்கியமான நாள் தான் ஜிஎஸ்டி நாள். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பிறகு மிக முக்கியமான நாளாக 5 ஆவது ஜிஎஸ்டி நாள் பார்க்கப்படுகிறது. இந்த சமூகத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் காண்கிறோம் என்பதில் தான் இது உள்ளது. இதனை பிரித்து பார்த்தால் பல பார்வையில் பார்க்கலாம்.

    அகண்ட பாரதம்

    அகண்ட பாரதம்

    கூட்டாட்சி பற்றி பேசுவது மிகவும் முக்கியம். அதே சமயம் இந்தியா மிக நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டது. நாடு பல மாநிலமாக பிரிந்து உள்ளது. ஆனால், நம் முன்னோர்களின் பாரத நாடு என்ற எண்ணம் முற்றிலும் மாறுபட்டது. நாடு ஒரு அகண்ட பாரதம். பாரதம் என்பது ஒன்றே. பாரதத்தில் பல மொழி கலாச்சாரம் உள்ளது. அதுவே பாரதத்தின் அழகு. விவேகானந்தரும், பாரதியாரும் அவர்களுடைய பாடலில் அகண்ட பாரதம் குறித்து கூறியுள்ளனர். வேதம் நிறைந்த தமிழ்நாடு, உயிர் வீரம் செழிந்த தமிழ்நாடு எனப் பேசியுள்ளனர்.

     ஒன்றிணைக்கும் ஜிஎஸ்டி

    ஒன்றிணைக்கும் ஜிஎஸ்டி


    பல சந்தைகள் உள்ள இந்த நாட்டில் தான் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்றால் பல பிரச்னைகள் உள்ளது. ஆனால், சர்தார் வல்லபாய் படேல் எப்படி இந்த நாட்டை ஒன்றாக இணைக்க வேண்டும் என முயற்சி செய்தாரோ, அதேபோலத்தான் ஜிஎஸ்டி ஒரே நாடு, ஒரே வரி மூலம் ஒன்றிணைகிறது. ஜிஎஸ்டி மக்களுக்கு, வியாபாரிகளுக்கும் எளிமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி லாபம் ரூ.35 கோடி முதல் 1,500 கோடி வரை உயர்ந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா பலமான நாடாக இருக்கும்'' என ஆளுநர் ஆர்என் ரவி பேசினார்.

    English summary
    Tamil Nadu Governor RN Ravi says that GST Day is more important than Independence Day and Republic Day. He also says, GST unifies through one country, one tax.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X