சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரோந்து பணிக்கு துப்பாக்கி: டிஜிபி பேட்டி நடைமுறை சிக்கல் என்ன?யார் யார் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம்

Google Oneindia Tamil News

ஆடு திருடர்களால் எஸ்.எஸ்.ஐ வெட்டிக்கொல்லப்பட்ட துயரமான சம்பவத்தில் எஸ்.ஐ. பூமிநாதன் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த சட்டம் ஒழுங்கு டிஜிபி இனி ரோந்துச் செல்பவர்கள் துப்பாக்கியுடன் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார். நடைமுறையில் இது சாத்தியமில்லாத ஒன்று என போலீஸார் காரணங்களை அடுக்குகிறார்கள். யார் யார் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்பதிலும் சிக்கல் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.

கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி ஆடு திருடிய சிறுவர்கள்... - பூமிநாதன் கொலையில் வெளியான பகீர் தகவல்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி ஆடு திருடிய சிறுவர்கள்... - பூமிநாதன் கொலையில் வெளியான பகீர் தகவல்கள்

 காவல்துறைக்கு எவ்வாறு தேர்வு நடக்கிறது?

காவல்துறைக்கு எவ்வாறு தேர்வு நடக்கிறது?

தமிழக காவல்துறையில் மூன்றுவிதமாக பணியில் இணைகிறார்கள். ஒன்று சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் கடைநிலை கிரேட் 2 காவலர்களாக ஆயுதப்படை, சிறப்புக்காவல் படைக்கு தேர்வு நடந்து தேர்வு செய்யப்படுவது. இவர்கள் பின்னர் கான்ஸ்டபிள்களாக ஸ்டேஷன் டூட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பப்படுவர்.

இவர்கள் தனது வாழ்நாளில் அதிகபட்சமாக உதவி கமிஷனர் அந்தஸ்த்துக்கு வந்து ஓய்வு பெறுவார்கள். ஆனால் பெரும்பாலும் இன்ஸ்பெக்டர் ஆகும்போதே ஓய்வு வயது நெருங்கிவிடும். பலர் எஸ்.ஐ ஆகும்போதே ரிட்டையர்டு ஆகிவிடுவார்கள். இதற்கு காரணம் 10, 15, 20 ஆண்டுகளில் வரும் பதவி உயர்வு வரவேண்டும். வராவிட்டால் சிக்கல்.

 நேரடி எஸ்.ஐ தேர்வு

நேரடி எஸ்.ஐ தேர்வு

அடுத்து தேர்வு செய்யப்படுபவர்கள் நேரடி எஸ்.ஐயாக தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களும் சீருடைப்பணியாளர் தேர்வு எழுதி எஸ்.ஐயாக பயிற்சி பெற்று ஸ்டேஷனில் அமர்வார்கள். இவர்கள் ஓய்வுபெறும் போது அதிகப்பட்சமாக எஸ்.பி அளவில் வர வாய்ப்புண்டு. ஆனால் பெரும்பாலானோர் உதவி கமிஷனர் லெவலில் வந்தாலே பெரிய விஷயம். சிலர் ஏடிஎஸ்பி அளவு வர வாய்ப்பு கிடைக்கும்.

 குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக டிஎஸ்பிக்கள் தேர்வு

குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக டிஎஸ்பிக்கள் தேர்வு

மூன்றாவதாக குரூப் 1 தேர்வு மூலம் நேரடியாக டிஎஸ்பி அந்தஸ்தில் அதிகாரியாக அமர்வது. இவர்கள் குறிப்பிட்ட ஆண்டு சர்வீஸுக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரிகளாக நிலை உயர்த்தப்படுவார்கள். இவர்கள் பணியில் இணையும் வயதை பொறுத்து ஏடிஜிபி அளவுக்கு பணியாற்றி ஓய்வு பெறுவார்கள் (தற்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஒரு குரூப்-1 அதிகாரியே)

இது மாநில அளவிலான வரம்புக்கு உட்பட்டு காவல்துறைக்குள் வரும் வழி. இது தவிர ஆட்சிப்பணி தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆகி எஸ்.பியாக நேரடியாக பதவியில் அமர்வது. இதில் முதல் மூன்று பதவிகள் பற்றி மட்டும் பார்ப்போம்.

 யார் யார் கைத்துப்பாக்கியை பயன்படுத்தலாம்

யார் யார் கைத்துப்பாக்கியை பயன்படுத்தலாம்

இவைகளை எழுதக்காரணம் காவல்துறையில் பணியில் இணைகிற அனைவருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும். ஆனால் எவ்வகை துப்பாக்கிகள் என்பது முக்கியம். காவல்துறையில் துப்பாக்கியை யார் யாரெல்லாம் கையாளுகிறார்கள் என்பதைப்பொறுத்தே டிஜிபி சொன்ன அந்த துப்பாக்கியை எடுத்துச் செல்லும் தகுதி பற்றி தெரிய வரும்.

 போலீஸில் பொதுவாக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள்

போலீஸில் பொதுவாக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள்

போலீஸில் பொதுவாக வெள்ளைக்காரன் காலத்திலிருந்து 303 எனப்படும் நீண்ட துப்பாக்கி ( போலீஸ் ஸ்டேஷனில் பாரா டூட்டி பார்ப்பவர்கள் கத்தி சொருகி வைத்திருப்பார்களே அதுதான்) இது தவிர எஸ்.எல்.ஆர் கன் எனப்படும் துப்பாக்கியும் (எளிதாக சொல்லணும் என்றால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் வேன் மீது படுத்து சுடுவாரே அந்த துப்பாக்கி).

பயிற்சியின் போது காவலர் அளவிலான ஆட்களுக்கு 303 எனப்படும் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர் கன் எனப்படும் துப்பாக்கியும் பயிற்சி காலத்தில் கட்டாயம் பயிற்சி எடுக்க வேண்டும். பிஸ்டல் எனப்படும் கைத்துப்பாக்கி பயிற்சி அளிப்பதில்லை.

 பிஸ்டல்- கைத்துப்பாக்கி பயிற்சி

பிஸ்டல்- கைத்துப்பாக்கி பயிற்சி

இது நேரடி எஸ்.ஐ பயிற்சி பெறுபவர்கள் ஆரம்பித்து அதற்கு மேல் உள்ள அனைவருக்கும் பயிற்சி கொடுக்கப்படும். இந்தப் பயிற்சியை தனி நபர் பாதுகாப்புக்கு செல்லும் உதாரணமாக முதல்வர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பாதுகாப்புக்கு செல்பவர்கள், பிஎஸ்ஓக்கள் எனப்படுபவர்கள், கோர் செல்லில் பணியாற்றும் காவலர் லெவலில் உள்ளவர்கள், எஸ்.பி முதல் உயர் அதிகாரிகள், ஆட்சியர் உள்ளிட்டோருக்கு செல்லும் கன் மேன் எனப்படும் காவலர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 யாருக்கு கைத்துப்பாக்கி பயிற்சி இல்லை?

யாருக்கு கைத்துப்பாக்கி பயிற்சி இல்லை?

இதன் மூலம் தெரியவருவது ஸ்டேஷனில் காவலர் லெவல் மற்றும் எஸ்.எஸ்.ஐ வரை பிஸ்டல் துப்பாக்கி பயிற்சி கொடுக்கப்படுவதில்லை. சிறப்பு பிரிவில் இருக்கும் காவலர்கள் பயிற்சி எடுப்பதை இதில் சேர்க்கக்கூடாது. சட்டம் ஒழுங்கு டூட்டி பார்க்கும் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு எஸ்.ஐ க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி. இதற்காக ஒரு ஸ்டேஷனில் 2 அல்லது 3 பிஸ்டல்கள் மட்டுமே இருக்கும்.

 டிஜிபி கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல சொன்னது சாத்தியமா?

டிஜிபி கைத்துப்பாக்கி எடுத்துச் செல்ல சொன்னது சாத்தியமா?

தற்போது விஷயத்திற்கு வருவோம். டிஜிபி பேட்டி அளித்தபோது "இனி ரோந்து பணியில் செல்வார்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்வதற்கு அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று தெரிவித்துள்ளோம்". என பேசியுள்ளார். வரவேற்கத்தகுந்த விஷயம் தான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றை டிஜிபி பேசிச் சென்றுள்ளார் என சொல்கின்றனர் காவலர்கள்.

 இரவு ரோந்துப்பணியில் உயிரைப்பணயம் வைக்கும் காவலர்கள்

இரவு ரோந்துப்பணியில் உயிரைப்பணயம் வைக்கும் காவலர்கள்

என்ன பிரச்சினை என்று கேட்டபோது அவர்கள் அடுக்கடுக்காக சொன்ன காரணங்கள் இவைதான், ரோந்துப்பணிக்கு 2 பேர் சேர்ந்து செல்லவேண்டும் என்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். சென்னையில் பகலில் அனைத்து ஸ்டேஷன்களிலும் சேர்த்து 5000 போலீஸாருக்கு மேல் பணியில் இருப்பார்கள். ஆனால் இரவுப்பணிக்கும் ஒரு ஸ்டேஷனுக்கு 2 பேர் என போடுகிறார்கள். அப்படிப்பார்த்தால் சென்னை முழுவதும் 750- 1000 போலீஸார் இரவுப்பணிப் பார்த்தால் பெரிய விஷயம்.

இதில் சென்னையில் காவலர்கள் தாக்கப்படுவது குறைவு ஏனென்றால் நகரம், சிசிடிவி கேமரா, அழைத்தால் வருவதற்கு அருகருகில் ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால் உள் மாவட்டங்களில் நகரங்களைத்தாண்டி உள் பகுதிகளில் தாக்குதல் நடக்க வாய்ப்பு அதிகம். இங்கு ஸ்டேஷனுக்கு ஓரிருவர் வந்தாலே அதிகம், அவர்களும் அதிக தூரத்தை பார்க்க வேண்டி இருக்கும். அதுபோன்ற சமயங்களில் அதிக தாக்குதலுக்குள்ளாகின்றனர்.

காவலர்களின் நீண்டகால கோரிக்கை

காவலர்களின் நீண்டகால கோரிக்கை

இதை சரி செய்ய ரோந்துப்பணியில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இன்று டிஜிபி சொன்னது போல் ரோந்துப்பணிக்கு செல்பவர்களுக்கு கைத்துப்பாக்கி தரவேண்டும் என்கிற கோரிக்கை சமீபத்தில் கூட போலீஸார் கோரிக்கையில் ஒன்றாக வைக்கப்பட்டது.

சரி துப்பாக்கி எடுத்துச் செல்லுங்கள் என்று டிஜிபி சொல்லிவிட்டார் அது நடைமுறையில் சாத்தியமா? என்றால் சாத்தியமில்லை. காரணம் போலீஸ் ஸ்டேஷன்களில் இரவு ரோந்துப்பணிக்கு செல்பவர்கள் காவலர்கள், தலைமைக் காவலர்கள், எஸ்.எஸ்.ஐக்கள் இவர்களுக்கு கைத்துப்பாக்கி (பிஸ்டல்) அனுமதியில்லை.

கைத்துப்பாக்கிகளும் போதிய அளவில் இல்லை

கைத்துப்பாக்கிகளும் போதிய அளவில் இல்லை

அப்படியே அனுமதி அளித்தாலும் அவர்களுக்கு பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படவில்லை. சரி பயிற்சியே இருந்தாலும் ஸ்டேஷன்களில் கைத்துப்பாக்கி எண்ணிக்கை குறைவாக இருக்கும். 2 அல்லது 3 மட்டுமே இருக்கும். அதுவும் ஸ்டேஷன் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள் பயன்படுத்துவார்கள். ஏன் மாவட்ட படைகலனில் போய் பெற்றுக்கொள்ளலாமே என்றால் அனுமதி பெற்று பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பயிற்சி இல்லாமல் கைத்துப்பாக்கியை வைத்து என்ன செய்வது.

 ஆண்டுக்கு இருமுறை துப்பாக்கி பயிற்சி நடக்கிறதா?

ஆண்டுக்கு இருமுறை துப்பாக்கி பயிற்சி நடக்கிறதா?

காவல்துறையில் ஆண்டுக்கு 2 முறை 6 மாதத்துக்கு ஒரு முறை துப்பாக்கிச் சுடும் பயிற்சி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி ஆனால் நடைமுறையில் அது இல்லவே இல்லை என்கின்றனர் போலீஸார். குறைந்தப்பட்சம் ஆண்டுக்கு ஒருமுறைக்கூட பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்பது குறையாக உள்ளது.

அதுவுமல்லாமல் டிஜிபி சொல்வதுபோல் துப்பாக்கியுடன் செல்லும் அளவுக்கு போதிய துப்பாக்கிகள் இருக்குமா என்பதும் கேள்விக்குறியே. காவல்துறையை நவீனப்படுத்துதல் என்பது காலத்துக்கேற்றார்போல் மாறுவது. அது காவலர்களுக்கான பயிற்சி, நவின கருவிகளை கொள்முதல் செய்வது என்பது உட்பட அடங்கும் என்கின்றனர் காவலர்கள்.

 303 ரைபில் எடுத்துச் செல்வது சாத்தியமா?

303 ரைபில் எடுத்துச் செல்வது சாத்தியமா?

இது தவிர ஸ்டேஷனில் இருக்கும் 303 ரைபிளை எடுத்துச் செல்வதும் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று அதன் எடை, நீளம், வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்ல முடியாது. அதன் ரேஞ்ச் லெவலும் அதிகம். எஸ்.எஸ்.ஐ பதவிக்கு ஒருவர் வரும்போது அவர் 50 வயதை கடந்திருப்பார். அதனால் அது சாத்தியமில்லை. பின் எந்த துப்பாக்கியை எடுத்துச் செல்வது என கேள்வியை முன் வைக்கிறார்கள் போலீஸார்.

 பிஸ்டல் பயிற்சி சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கும் வேண்டும்

பிஸ்டல் பயிற்சி சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கும் வேண்டும்

முதலில் ஆண்டுக்கு 2 முறை துப்பாக்கி பயிற்சியை அனைத்து காவல் நிலை போலீஸாருக்கும் அளிக்க வேண்டும். அதில் பிஸ்டல் பயிற்சி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். பிஸ்டல்களை வைத்துக்கொள்ள ஸ்டேஷன் கான்ஸ்டபிள் அந்தஸ்து காவலருக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப மாவட்டந்தோறும் ஆயுதங்கள் கொள்முதல் அதிகரிக்கப்பட வேண்டும். இவைகள் எல்லாம் நடந்தால் டிஜிபி சொன்னது நடக்கும், இல்லாவிட்டால் ஏட்டளவில் தான் என்று சொல்கின்றனர் போலீஸார்.

பூமிநாதன்கள் போல் எத்தனையோ காவலர்கள் இன்னுயிரை ஈந்துள்ள நிலையில் காவலர் பாதுகாப்பு முக்கியம் என அதிகாரிகள் கருதும்பட்சத்தில் மேற்சொன்ன இடையூறுகளை களைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லாவிட்டால் பேருக்கு பேட்டி கொடுத்து விட்டு செல்ல வேண்டியதுதான் என்று சொல்கின்றனர் காவலர்கள். டிஜிபி மனது வைப்பாரா? குறைகள் களையப்படுமா?

English summary
Practical Problems For Keeping Gun During Patrol Duty: ரோந்துப்பணியில் ஈடுபடுபவர்கள் கைத்துப்பாக்கி 6 தோட்டாக்கள் எடுத்துச் செல்லவேண்டும் என்கிற டிஜிபியின் பேட்டி சாத்தியமா என்பதை அலசுவோம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X