சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபுல்டாஸ் போடும் திமுக.. சிக்ஸர் அடிக்கும் பாஜக.."தாமரை"யை வளர்ப்பது ஸ்டாலின்.. யார் சொல்றது பாருங்க

அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்றரை வருஷத்தில் பாஜக வளர்கிறது என்றால், அதற்கு முழுக்க முழுக்க காரணம் திமுகதான்.. அதனால், திமுகவுக்கு பாஜக நன்றிகடன் பட்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நவம்பர் 6ம் தேதி பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த பேரணிக்கு அனுமதி தராவிட்டால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழகத்தின் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்தான் இவை:

"சைலண்ட் டீல்".. திருமாகிட்ட ஸ்டாலின் "அதை" சொன்னாரா.. யாரோ தப்பா அட்வைஸ் பண்றாங்க: சுமந்த் சி.ராமன்

 கம்மென்ற திமுக

கம்மென்ற திமுக

"சிறிய அளவிலான பேரணியை சங் பரிவார் அமைப்புகள் எப்போதுமே ஏற்றுக்கொள்வதில்லை.. அப்படி இருக்கும்போது, அழுத்தங்களும் கூடியுள்ளது, அதிக அளவு மக்கள் கூடி, நடக்க போகும் பேரணியை பெரிய லெவலுக்கு நடத்தி காட்ட வேண்டும் என்ற பிரஷரை இன்று ஆர்எஸ்ஸுக்கு தந்திருப்பதே இந்த அரசுதான்.. திமுக கம்மென்று விட்டிருந்தால், அவங்க பாட்டுக்கு பேரணி போயிருப்பாங்க.. ஏனென்றால், பல வருடங்களாகவே, அவர்கள் கோர்ட்டுக்கு போய்தான் பேரணிக்கு அனுமதி வாங்க வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் இருந்தாலும், பல வருடங்களாகவே அமைதியாக பேரணியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

 டபுள் டிஜிட்

டபுள் டிஜிட்

இங்கு நடந்த ரெய்டு, பெட்ரோல் குண்டு வெடிப்பு போன்ற பதற்றத்தை காரணமாக வைத்து, மாநில அரசு மறுப்பதில் ஒருவகை நியாயம் உள்ளது.. ஆனால், வேறு ஒரு தேதியை அரசே ஒதுக்கி தந்திருக்கலாம்.. அதைவிட்டுவிட்டு பேரணியே கூடாது என்றார்களே, அங்குதான் தேவையில்லாமல் இதை பிரச்சனையாக்கிவிட்டார்கள். பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை என்று இனிமேலும் சொல்ல முடியாது.. அதிலும் நிச்சயமாக 3 சதவீத வாக்கு வங்கி கிடையாது.. ஆனால், டபுள் டிஜிட் வாக்கு வங்கி உறுதியாக இங்கு உள்ளது.. இதை திமுகவும் உணர்ந்து கொண்டுவிட்டது.. அதனால்தான், இப்படியெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக நினைக்கிறேன்...

 ஃபுல்டாஸ்

ஃபுல்டாஸ்

பாஜக வளர்ந்து வருவதால்தான், திமுக தீவிரமாக செயல்பட நினைக்கிறது.. ஆனால், தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதைவிட்டுவிட்டு, திமுக கம்மென்று இருந்தாலே, பாஜக வளர்ச்சியை குறைத்துவிடலாம்.. அதைவிட்டுவிட்டு, பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவி கொண்டிருக்கிறது.. பாஜக தமிழகத்தில் மேலும் வளர்கிறது என்றால், அதற்கு முழுக்க முழுக்க திமுகவுக்கு பாஜக நன்றிகடன் பட்டிருக்கிறது.. 10 வருஷம் அதிமுக ஆட்சி இருந்ததே, பாஜகவால் இங்கு வளர முடிந்ததா? எடப்பாடி நாலரை வருஷம் இருந்தாரே, பாஜக வளர முடிந்ததா?

 ஃபைனல் ஓவர்

ஃபைனல் ஓவர்

அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், பாஜக என்ற கட்சி வளர முடிந்ததா? ஆனால், ஒன்றரை வருஷத்தில் பாஜக வளர்கிறது என்றால், என்ன காரணம்? அண்ணாமலை செயல்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும், திமுகதான் மெயின் காரணம்.. ஒவ்வொரு வாரமும் திமுக மீதான குற்றச்சாட்டுகளை, கிஃப்ட் மாதிரி எடுத்து தந்து கொண்டே இருக்கிறார் அண்ணாமலை.. கிரிக்கெட்டில் ஃபைனல் ஓவரில், சிக்ஸர் எடுப்பதற்கு, ஃபுல்டாஸ் போடுவாங்களே, அந்த மாதிரி திமுக நடந்து கொள்கிறது" என்றார்.

English summary
Has BJP grown in Tamil Nadu and DMK MK Stalin is the Major reason for that explains Sumanth C. Raman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X