சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடம்மாறிய "ஸ்வீட்பாக்ஸ்".. மேலிடம் அவ்ளோ சொல்லியும் கேக்கலயே.. அறிவாலயம் பறந்த புகார்கள்.. சுபம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் குறித்த புகார்கள் அறிவாலயத்துக்கு வந்து கொண்டிருக்கிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் ஒரு சிக்கல் வெடித்துள்ளது.. இறுதியில் அது தொடர்பாக விவகாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு, சுமூக முடிவை எட்டும் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

எப்போதுமே திமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார் என்றாலும், கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த அழுத்தம் இன்னும் அதிகமாகிவிட்டதாகவே தெரிகிறது.

அதனால்தான், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுக்கு சில அட்வைஸ்களும் முதல்வர் தரப்பில் இருந்து பறந்ததாக 2 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி கசிந்தது..

 திமுக தலைவர் தேர்தல்..நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன்.. பரபர அறிவாலயம் திமுக தலைவர் தேர்தல்..நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன்.. பரபர அறிவாலயம்

ஸ்டிரிக்ட்

ஸ்டிரிக்ட்

அதாவது, "எந்த ஒரு சின்ன விஷயம் என்றாலும், அதை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேடும் வேலைகளில் பாஜக இறங்கிவிட்டது.. சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறது.. இப்படிப்பட்ட நேரத்தில் கோஷ்டி மனப்பான்மையுடன் நீங்கள் எல்லாம் செயல்பட்டால், அது நமக்குதான் நஷ்டம்.. எம்பி தேர்தலில் பல தொகுதிகளை நாம் இழக்க நேரிடும்.. அதனால், இதுபோன்ற ஆபத்துகளை இனியும் புரிந்துகொள்ளாமல் கோஷ்டி அரசியல் நடத்தினால், எனக்கு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை" என்று சற்று கறாராகவே முதல்வர் அட்வைஸ் செய்தாராம்.

ஜுனியர்

ஜுனியர்

முதல்வரின் இந்த பேச்சுக்கு கட்டுப்பட்டு, திமுக மா.செ.க்கள், அமைச்சர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளனராம். அதனால்தான், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஜூனியரான அன்பில் மகேஷை போனை போட்டு, நேரடியாகவே கூப்பிட்டாராம் சீனியரான நேரு... இன்ப அதிர்ச்சியாக அந்த போன் வந்ததால், மறுத்துப் பேசாமல், மற்ற வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு, உடனடியாக வந்து நேருவின் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.. இப்படி மெல்ல மெல்ல நடக்கும் மாற்றங்களை பார்த்து திமுக தரப்பில் நிம்மதி ஏற்பட்டு வரும் நிலையில், இன்னொரு அதிர்ச்சி தகவல் ஒன்று கசிந்து வருகிறது..

 ஸ்வீட்பாக்ஸ்

ஸ்வீட்பாக்ஸ்

அதன்படி, திமுகவில் உள்கட்சித் தேர்தல் முடிந்து தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். இதனையடுத்து திமுகவில் உள்ள இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர்கள் அணி உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட அணிகளின் நிர்வாகிகளை நியமிப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது. இதற்கான பட்டியல்களை தயாரித்து வருகிறார்கள் மாவட்ட செயலாளர்கள் என பழைய நிர்வாகிகளில் பலரையும் மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு புது லிஸ்ட் ஒன்றை தயாரித்து வருகிறார்களாம்.

ஜூனியர்ஸ்

ஜூனியர்ஸ்

இந்த லிஸ்ட் பற்றி கேள்விப்பட்டதுமே, நிறைய அதிருப்திகள் கட்சிக்குள் வெடித்தபடி இருக்கிறது.. கடைசியில் இது தொடர்பாக அறிவாலயத்திலும் புகார்களும் குவிய ஆரம்பித்துவிட்டன. உண்மையிலேயே என்ன நடக்கிறது? அதென்ன புது லிஸ்ட்? என்பது குறித்து அறிவாலயத்தரப்பில் நாம் விசாரித்தோம்.. அதாவது, "உள்கட்சி தேர்தலில் ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளே, மீண்டும் இருக்கும்படி அவர்களுக்கு பதவிகள் வழங்குங்கள். பெரிய அளவில் போட்டி வேண்டாம். ரொம்பவும் பிரச்சனைக்குரிய குற்றச்சாட்டுகள் இருக்கிற நிர்வாகிகளை மட்டும் மாற்றிவிடுங்கள் என்று தலைமையிடமிருந்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 புதுபுது லிஸ்ட்

புதுபுது லிஸ்ட்

அதேபோல தேர்தலும் நடந்து முடிந்தன.. ஆனால், மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் கூட பெரிய அளவில் மாற்றம் நடக்கவில்லை.. அதனால், இப்போது அணிகளின் நிர்வாகிகளை நியமிக்க லிஸ்ட் வழங்குகள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை உத்தரவிட்டிருக்கிறது.. அத்துடன், அணிகளின் மாவட்ட நிர்வாகிகளிலும் பெரிய மாற்றம் வேண்டாம் என்றும் அட்வைஸ் தந்துள்ளது.. ஆனால், மாவட்ட செயலாளர்களோ, பழைய நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க லிஸ்ட் ஒன்று ரெடி பண்ணி வருகிறார்கள்..

 ஸ்வீட் பாக்ஸ்கள்

ஸ்வீட் பாக்ஸ்கள்

இதற்காக, புதியவர்களிடம் "ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை" மாவட்ட செயலாளர்கள் பெற்றுவிட்டார்கள்.. அதனால்தான் பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு, அவர்களின் பதவிகள் மிக ரகசியமாக விலைபேசி விற்கப்படுகிறது. இந்த விஷயம் கேள்விப்பட்ட பழைய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து அறிவாலயத்துக்கு புகார்களை அனுப்பி வருகிறார்கள்'' என்று நம்மிடம் விலாவரியாக அண்ணா அறிவாலயம் தரப்பில் விவரிக்கிறார்கள்.

அட்வைஸ்கள்

அட்வைஸ்கள்

அதேபோல, சென்னையிலுள்ள நிர்வாகிகள் பலரிடமும் பேசியபோது அவர்களும் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.. "இப்போதைக்கு பதவியில் இருப்பவர்களே இருக்கட்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் ஒரு முடிவை தலைமை எடுத்தது.. அதனால்தான் பலரின் பதவிகள் தப்பித்தன.. இல்லாவிட்டால் 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்போயிருக்கும்.. இப்போது நிர்வாகிகள் விஷயத்திலும் சில அட்வைஸ்கள் மேலிடத்தில் இருந்து தரப்பட்டன.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

"சர்ச்சைகள் வேண்டாம்.. எல்லோரும் சீனியர்களாக இருக்கிறார்கள்.. கடந்த 10 ஆண்டுகாலமாக எவ்வளவோ க‌ஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.. அதனால் இருப்பவர்களே இருக்கட்டும்" என தலைமை உத்தரவிட்டபோதும் நிர்வாகிகளை மாற்றிவிட்டு, தகுதியில்லாத புதியவர்கள் பலரிடமும் பேரம் பேசி முடித்துள்ளனர்.. அவர்களைத்தான் பதவிகளுக்கு கொண்டு வர துடிக்கிறார்கள் இந்த மாவட்ட செயலாளர்கள்.. அதனால் ஒரே கொந்தளிப்பாக இருக்கிறது.

போஸ்டிங்

போஸ்டிங்

இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், பழையவர்கள் புறக்கணித்துவிட்டு, புதியவர்களுக்கு போஸ்டிங் தந்தால், பலரும் வேறு கட்சிகளுக்கு தாவிவிடும் வாய்ப்பு உள்ளது... அப்படி தாவும்போது, நிர்வாகிகள் நியமனத்தில் நடந்த பின்னணிகளை பற்றி கண்டபடி பேட்டியளிப்பார்கள்.. அதேபோல, பின்னணிக்கு காரணமான மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களும் என்ன மாதிரியான அணுகுமுறையில் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர் என்பதையும் வெளிப்படுத்த நிர்வாகிகள் தீர்மானித்திருக்கிறார்கள்" என்று நம்மிடம் தெரிவிக்கிறார்கள் சென்னை மாவட்ட நிர்வாகிகள்..!!

English summary
Has internal conflict started again in DMK and Complaints against District Secretaries, say sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X