தரமான சம்பவம்.. 'தாய்'மொழிகள் சீண்டப்படும் போதெல்லாம்.. #stopHindiImposition
சென்னை: தாய்மொழிகள் சீண்டப்படும் போதெல்லாம் #stopHindiImposition என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் டெல்லி அரசு மருத்துவனையில் தங்களுக்குள் மலையாளம் பேசினால் செவிலியர்கள் மீது நடவடிக்கை என்ற சுற்றிக்கைக்க எதிராக இந்தியை திணிக்க முயலக்கூடாது என்று ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு மொழி என்பது தொடர்பின் வழி... ஒருவரின் உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்ளும் கருவி. எல்லோருக்குமே முதன்மையான மொழி தாய் மொழி தான். அவரவர் தாய் மொழியே பேசுவதே அவரவருக்கு பெருமை.... தாய்மொழி தெரியாமல் போனால் அதுதான் உலகின் ஆகச்சிறந்த கொடுமை.\
சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்பட உலகின் எந்த நாடுமே தங்கள் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கின்றன. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கின்றன. தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை கற்று தருகின்றன.

மும்மொழி கொள்கை
ஆனால் இந்தியாவில் சற்று வித்தியாசமானது, அவரவர் தாய்மொழியும் கற்க வேண்டும், ஆங்கிலமும், இந்தியும் கற்க வேணடும் என்ற நிர்பந்தங்கள் உள்ளன. அதாவது மூன்று மொழிகள் கட்டாயம் கற்க வேண்டும் என்று திணிக்கப்படுகின்றன. இதில் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும், ஏற்கும் பல்வேறு மாநில மக்கள் இந்தியை திணிப்பதை ஏற்பது இல்லை.

இந்திக்கு ஆதரவு
இந்தி பேசும் மாநிலங்களும் எங்களை போலவே அவர்களது தாய்மொழியான இந்தியுடன் ஆங்கிலத்தையும் நன்றாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்தி பேசாத மாநிலங்கள் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால் துரதிஷ்டவமாக இந்திக்கு ஆதரவாகவே இதுவரை வந்த மத்திய அரசுகள் நடந்து வந்துள்ளன. நாடு முழுவதும் ஒரே மொழி என்ற கொள்கையை விரும்புகின்றன. தாய்மொழியுடன் ஆங்கிலம் இருக்கிறது. என்னைப்போலவே அவரையும் ஆங்கில பேசச்சொல்லுங்கள் என்று சொன்னால் அவனை போல் நீயும் இந்தி பேசு என்கிறார்கள். இதற்கு பெயர்தான் இந்தி திணிப்பு.

பெருகும் குரல்
இதனால் தான் தாய்மொழிகள் சீண்டப்படும் போதெல்லாம் #stopHindiImposition என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழ், கன்னடம் , வங்காளம் உள்ளிட்ட மொழிகள் இந்தி திணிப்பை சந்தித்த போது குரல்கள் வெகுண்டெழுந்தன. அதேபோல் தான் மலையாளம் மொழியை செவிலியர்கள் மருத்துவனைக்குள் பேசக்கூடாது என்று டெல்லி ஜிப்மர் அரசு மருத்துவமனை போட்ட உத்தரவுக்கு ட்விட்டரில் தளத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது

மொழி பாகுபாடு வேண்டாம்
ஜிப்மர் மருத்துவமனையில் மலையாளம் பேசிக்கொள்ளக்கூடாது என்ற உத்தரவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மலையாளம் மற்ற இந்திய மொழியையும் போலவே இந்தியர்களின்.
மொழி.. எனவே மொழி பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

திருத்த வேண்டும்
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இந்த சிக்கலுக்கான மூல காரணம் ஆட்டிகிள் 343-351 இல் உள்ளது, இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ளன, இந்த ஆர்டிகிளை மத்திய அரசு திருத்தாவிட்டால் இந்த வகையான சிக்கல்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.

எங்கள் தாய்மொழியில் பேசுவீர்களா
இன்னொரு நெட்டிசன் கூறும் போது, ஒகே நாங்கள் உங்கள் ஊர்களில் பணிபுரியும் இடங்களில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச தயாராக உள்ளோம். ஆனால் தென்னிந்தியாவின் வேலைக்கு வரும் வடஇந்தியர்கள் தங்களுக்குள் இந்தி பேசக்கூடாது. ஆங்கிலத்தில் அல்லது அந்தந்த மாநில தாய்மொழியில் தான் பேச வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும். முதற்கட்டமாக ஹைதராபாத், பெங்களூரு, சென்னையில் கொண்டுவர வேண்டும் எனறு கூறியுள்ளார். இன்னொருவர் ஜிப்மர் மருத்துவனை, இந்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளிலேயே நர்சுகளை எடுக்க வேண்டியது தானே ஏன் மற்ற பகுதியில் உள்ளவர்களை வேலைக்கு எடுக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications