டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு.. மே 31 வரை மட்டுமே அவகாசம்.. தமிழக அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்
சென்னை: காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி வந்தது. ஆனால் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.. இதற்கு கண்டம் தெரிவித்த உயர்நீதிமன்றம், காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வருகிற மே 31-ந்தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றால், அதன் பின்னர் ஜூன் 1-ந்தேதி முதல் விற்கப்படும் ஒரு மதுபாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக வசூலிக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்தது.
ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பலர் குடித்துவிட்டு பாட்டில்களை விட்டு எறிந்து செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் அதிகரித்து. இதையடுத்து வனம், வனவிலங்கு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை தொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது.

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. வழக்குகளை விசாரிக்கும்போது, ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படியே உடனே அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தியுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் அமல்படுத்த அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மதுபாட்டில்களுக்கு கியூஆர் கோடு பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், காலி பாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை இருக்காது. காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்தை அமல்படுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும்" என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி , "ஏற்கனவே ஒரு மாதம் அவகாசம் வழங்கியும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இந்த திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த பிரச்சினையை அரசு தீர்வு கண்டிருக்கவேண்டும். தினமும் 2 கோடி மதுபாட்டில்கள் விற்பனை ஆகிறது.
காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இறுதியாக மே 31-ந்தேதி வரை அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் அமல்படுத்த வில்லை என்றால், அதன்பின் ஜூன் 1-ந்தேதி முதல் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க உத்தரவிடப்படும்" என்று எச்சரித்தனர். வழக்கு விசாரணையை ஜூன் 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications