பெத்த புள்ளை கதறுதே.. காரின் பின் சீட்டில் கள்ளக்காதல் ஜோடி அதிர்ச்சி செயல்.. இப்படி ஒரு கல்யாணமா
சென்னை: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது 7 வயது மகனையும், அத்தனை காலமும் தன்னுடன் வாழ்ந்து வரும் கணவரையும் உதறிவிட்டு, கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளை விட கள்ளக்காதலே முக்கியம் என அந்தப் பெண் எடுத்த முடிவு, ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.
ஹாசன் தாலுகா முக்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கும் அரக்கல்கோடு தாலுகா முண்டகோடு கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

மிஸ்ஸிங் மனைவி
கடந்த 9 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த இந்தத் தம்பதிக்கு, இப்போது 7 வயதில் ஒரு மகன் உள்ளான். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில், சச்சின் என்ற இளைஞரின் வருகை புயலை வீச செய்தது. அதே பகுதியைச் சேர்ந்த சச்சினுடன் ஹர்ஷிதாவுக்கு ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் எல்லை மீறிய கள்ளக்காதலாக உருவெடுத்தது.
கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி, உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனைக்குச் சென்று வருவதாகவும் சொல்லிவிட்டு ஹர்ஷிதா வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்.. ஆனால் சாயங்காலம் நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தேடினர். எங்கும் அவர் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த பிரகாஷ் ஹாசன் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹர்ஷிதாவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் அவர் சச்சினுடன் சென்றிருப்பது உறுதியானது.
போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீர் போராட்டம்
இதையடுத்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தேடி துவங்கினார்கள்.. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஹர்ஷிதா இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து, அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். அதற்குள் அங்கு பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் திரண்டுவிட்டனர்.
"7 வயது மகனின் எதிர்காலத்தை நினைத்துப் பார், உன்னைத் தேடி அந்த குழந்தை அழுதுகொண்டிருக்கிறான்" என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கெஞ்சினார்கள்.. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே எதற்குமே மசியாத ஹர்ஷிதா, "நான் என் கணவருடன் வாழ மாட்டேன், சச்சினுடன் தான் செல்வேன்" என்று பிடிவாதமாகப் பேசினார்.
நீண்ட நேரப் போராட்டத்திற்கும், போலீசாரின் அறிவுரைக்கும் பிறகு, ஹர்ஷிதா தனது மனதை மாற்றிக்கொண்டு கணவருடன் செல்லச் சம்மதித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர்.
மறுபடியும் ஒரே ஓட்டம்
கணவருடன் வீட்டுக்குச் சென்ற ஹர்ஷிதா, அடுத்த நாளே தனது முடிவை மீண்டும் மாற்றிக்கொண்டார். யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், மறுபடியும் தனது கள்ளக்காதலன் சச்சினைச் சந்தித்தார். இம்முறை அவர்கள் தப்பிச் சென்றது மட்டுமல்லாமல், ஓடிக்கொண்டிருந்த காரிலேயே மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டார்கள்.
காரின் பின் சீட்டில் உட்கார்ந்து இருவரும் மாலை அணிவித்துக்கொண்டு, தாலி கட்டிக்கொண்ட வீடியோவை சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்..
7 வயது மகனைத் தவிக்க விட்டுவிட்டு, தப்பிச் சென்ற பெண்ணின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு சிறுவனின் எதிர்காலத்தைச் சிதைத்துவிட்டு, கார் பயணத்தில் நடந்த இந்தத் திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.. அந்த குழந்தை, அம்மா, அம்மா என்று அழுது கொண்டிருக்கிறானாம்...!!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications