இதயத்தில் ஓட்டை.. உயிருக்கு போராடும் ஒன்றரை வயது குழந்தை! உடனே உதவுங்கள்
சென்னை: கனிரா எனும் 1.7 வயது பெண் குழந்தை இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. குழந்தையின் பெற்றோர்கள் கூலி தொழிலாளியாக இருப்பதால், குழந்தையை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே கனிராவின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்.
திருவள்ளூர் மாவட்டம் விழுஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சுவர் விளம்பர ஓவியர் செல்வகுமாருக்கும், முத்துலட்சுமி எனும் இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 2022ல் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. வருமானத்திற்காக முத்துலட்சுமி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு மாத வருமானமே ரூ.3000தான். அதேபோல ஓவியரான தந்தை செல்வகுமாருக்கு வேலையில் தினமும் ரூ.500 கூலியாக கிடைக்கும். இதை வைத்து இருவரும் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்த வருமானம் நிரந்தரமானது கிடையாது. அதேபோல, வேலையும் கடுமையானதாக இருக்கும். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், குழந்தைகளின் புன்சிரிப்பை பார்க்கும்போது எல்லாம் பறந்து போய்விடும். ஆனால், கடந்த சில மாதங்களாக குழந்தை கனிரா புன்சிரிப்புடன் இல்லை. 1.7 வயதில் எந்த குழந்தைகளும் எதிர்கொள்ளாத பல பிரச்னைகளை கனிரா எதிர்கொண்டிருக்கிறாள்.

அடிக்கடி ஏற்படும் உடல்நலக்குறைவு ஏராளமான மருத்துவ செலவுகளை இழுத்துவிட்டிருக்கிறது. பார்க்காத மருத்துவர் கிடையாது, செய்யாத வைத்தியம் கிடையாது. ஆனால் கனிராவின் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படி இருக்கையில்தான் கனிராவின் பெற்றோர் மியாட் மருத்துவமனையில் குழந்தையின் உடலை பரிசோதித்திருக்கின்றனர். பரிசோதனையில், குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதனை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். ஆனால் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு ரூ.1.4 லட்சம் செலவாகும். கூலி தொழிலாளியான கனிராவின் பெற்றோரால் இதை திரட்ட முடியாது. எனவே, அவர்கள் உங்களை நாடி வந்துள்ளனர். ஒன்றும் அறியாத சிறு குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள். சிறிய உதவிக்கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications