இன்று மாலை 6.30 மணிக்கு.. நான் ரெடி.. ட்வீட் போட்ட தயா அழகிரி.. பின்னணி என்ன?
சென்னை: இன்று மாலை 6. 30 மணிக்கு நான் ரெடி என மகிழச்சியான ஒரு ட்வீட்டை போட்டுள்ளார் தயாரிப்பாளரும் மு.க.அழகிரியின் மகனுமான தயா அழகிரி.
இவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். கிளவுட் நயன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் திரைப்பட விநியோகஸ்தராகவும் உள்ளார். இவர் மங்காத்தா, வடகறி, தகராறு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். பையா, தமிழ் படம், வாரணம் ஆயிரம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களின் விநியோகஸ்தர் ஆவார்.
இவரது தந்தை முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி. திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் ஸ்டாலின் என முன்னிலைப்படுத்தப்பட்டதை எதிர்த்ததாகவும் இதுகுறித்து தனது தந்தை கருணாநிதியிடம் நியாயம் கேட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

திமுகவிலிருந்து நீக்கம்
இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவரை திமுகவில் மீண்டும் இணைக்க தயாளு அம்மாள், செல்வி , கனிமொழி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அது பலனளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகும் திமுகவில் இணைய போராடினார்.

விமர்சனம்
இந்த நிலையில் அவ்வப்போது திமுகவையும் முதல்வராக உள்ள ஸ்டாலினையும் விமர்சித்து பேசிவந்தார். ஒரு கட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அவர் தனி கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவ்வாறு தொடங்கவில்லை.

முதல்வருக்கு வாழ்த்து
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னர் மு.க.. அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என பாராட்டியிருந்தார். கடந்த மே 7ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு அழகிரியின் மகன் தயா அழகிரியையும் மகள் கயல்விழியையும் வந்திருந்தார். அப்போது உதயநிதியும் தயா அழகிரியும் ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

தயா அழகிரி
இந்த நிலையில் இன்றைய தினம் மு.க. அழகிரியின் மகன் தயா அழகிரி தனது ட்விட்டரில் பூடகமான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். அதில் மாலை 6.30 மணிக்கு நான் ரெடி என தெரிவித்திருந்தார். ஒரு வேளை அவரது தந்தை ஏதேனும் கட்சியை தொடங்குகிறாரா, இல்லை இவரது புதுப்பட தயாரிப்பு குறித்த அறிவிப்பா என நினைக்க வைத்தது.

வலிமை அப்டேட்
அந்த ட்வீட்டின் கீழே பார்த்த போதுதான்... அட இதுதான் விஷயமா என புரிந்தது. #Valimai என போட்டுள்ளார். இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை திரைப்படத்தின் டிரெய்லர் ஒன்று வெளியாகிறது. அதைத்தான் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications