இறுகும் பிடி.. ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக பொருளாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: லோக்சபா தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு வரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராகுமாறு பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜக
வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பா.ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த சம்மனை எதிர்த்து பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்தநிலையில், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தாக்கல் செய்திருந்த மனுவில், தான் ஏற்கனவே கோவையில் சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்திய நிலையில், தொடர்ந்து சம்மன் அனுப்பி வருவதாகவும், தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர் சி பால் கனகராஜ், ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது என்று வாதிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம் என்றும் ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் என்றும் வாதிட்டார். தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது என்று கேட்டுக் கொண்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வருகிற வியாழக்கிழமை எஸ்.ஆர்.சேகர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications