Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நேரத்தில் 5 பெண்கள்.. நடிகைகளையும் விட்டு வைக்காத மாடலிங் இளைஞர்.. அதிர வைக்கும் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமண ஆசை காட்டி நிறைய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மாடலிங் இளைஞர் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முகமது ஷயாத் (27). இவர் துணை நடிகர், மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். தன்னுடன் மாடலிங் தொழில் நிமித்தமாக பழகிய பெண்கள், சினிமாவில் வாய்ப்பு கேட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை பேசியதாக தெரிகிறது.

இவ்வாறு திருமண ஆசை காட்டி பல பெண்களை தனது இச்சைக்குள் முகமது பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இவரை சென்னை வேப்பேரி மகளிர் போலீஸார் கைது செய்தனர். தற்போது சிறையில் இருக்கும் முகமது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

உடற்பயிற்சி வீடியோ

உடற்பயிற்சி வீடியோ

இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்து அதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை முகமது வாடிக்கையாக கொண்டதாக தெரிகிறது. இதற்கு நிறைய லைக்ஸ் குவியுமாம். இதனால் பூரிப்படைந்த முகமது தினந்தோறும் விதவிதமான படங்களை போட்டு வந்தார்.

 சமூகவலைதளங்களில்

சமூகவலைதளங்களில்


இவரை புதிதாக சமூகவலைதளங்களில் 3 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தார்கள். ஹூக்கா போதை பொருளை விரும்பும் அவர் மாடலிங் செய்யும் பெண்கள், நிகழ்ச்சிக்கு வரவேற்பாளராக பணியாற்றும் பெண்களுடன் நெருங்கி பழகியுள்ளாராம். ஒரே நேரத்தில் 5 பெண்களுடன் வாட்ஸ் ஆப் மூலம் சேட்டிங் செய்வாராம். அவர்களில் யார் சிக்குவார்களோ அவர்களுடன் அன்றைய தினம் உல்லாசமாக இருப்பாராம்.

பெண்கள் தனிமையில்

பெண்கள் தனிமையில்

இது போல் தன்னுடன் பெண்கள் தனிமையில் இருப்பதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் இவர் வாடிக்கையாக கொண்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பெற்று புதிதாக பெண்களை உல்லாச வலையில் சிக்க வைக்க செலவு செய்வாராம். இவ்வாறு பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியதாக தெரிகிறது.

தலையை காட்டிய நடிகை

தலையை காட்டிய நடிகை

விசாரணையில் சினிமாவில் சிறிது நேரம் தலையை காட்டிய நடிகைகளையும் விட்டு வைக்கவில்லையாம். இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் நீளுகிறது. இவர் மிரட்டி பணம் பறிப்பதாக புகாரின் பேரில் கைது செய்த போதுதான் போலீஸாருக்கு மேற்கண்ட அதிர்ச்சிகள் காத்திருந்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+