சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2.41 டூ 4.50! ஓபிஎஸ் திடீரென வென்றது எப்படி? கருணாநிதி வழக்கிலும் இப்படி நடந்தது இல்ல! நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரவு முழுக்க ஓபிஎஸ் நடத்திய சட்ட போராட்டத்திற்கு இடையில் அவருக்கு இந்த சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Recommended Video

    ADMK பொதுக்குழு தடைகோரிய மனு தள்ளுபடி... நீதிமன்றம் பரபர உத்தரவு

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடக்க உள்ளது. இதற்காக ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் மிகப்பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இந்த கூட்டத்திற்கே மொத்தமாக தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுக்கப்பட்டது. இப்படி பொதுக்குழுவை கூட்டுவது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் நேற்று காரசாரமான விவாதங்கள் வைக்கப்பட்டன.

     தகர்ந்த எடப்பாடியின் பொதுச்செயலாளர் கனவு.. உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் தகர்ந்த எடப்பாடியின் பொதுச்செயலாளர் கனவு.. உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

    வழக்கு

    வழக்கு

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைக்கு விடுத்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். நேற்று இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் வைத்த வாதத்தில், அதிமுக தீர்மானக்குழுவின் 23 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டேன்.

    இபிஎஸ் என்ன சொன்னார்?

    இபிஎஸ் என்ன சொன்னார்?

    ஆனால் வேறு அஜெண்டா எதையும் பொதுக்குழுவில் பேச கூடாது. ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை. அதனால் அதை பற்றி பேச கூடாது. புதிதாக எந்த தீர்மானத்தையும் சேர்க்க கூடாது, என்று ஓ.பி.எஸ். தரப்பு வாதம் வைத்தது. இதற்கு பதில் அளித்த இபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தனித்தீர்மானம் கொண்டு வர தடை விதிக்க முடியாது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பப்படியே கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும். அதன்படியே தீர்மானங்கள், முடிவுகள் எடுக்கப்படும். கட்சி விதிகளில் மாற்றம் செய்வது, திருத்தம் செய்வது போன்றவை நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். அது கட்சி முடிவை பொறுத்தது, என்று வாதம் வைத்தது.

    தீர்ப்பு - முறையீடு

    தீர்ப்பு - முறையீடு

    ஆனால் கடைசியில் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது. பொதுக்குழுவிற்கு தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரம் இருக்கிறது. அவர்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. பொதுக்குழு விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது பாரம்பரியம் கிடையாது என்று உத்தரவிட்டார். இது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

    இரவு நடந்த பரபரப்பு

    இரவு நடந்த பரபரப்பு

    இந்த நிலையில் உடனே ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் டிவிஷனல் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது. நேற்று இந்த வழக்கு இரவு முழுக்க சுவரசியாமாக நடந்தது. பொதுவாக இது போன்ற வழக்குகளில் அதிகாலையில் விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் கூறுவார்கள்.

    எப்படி நடக்கும்?

    எப்படி நடக்கும்?

    இரவில் சின்ன ஸ்டே ஒன்றை போடுவார்கள்.. பின்னர் அதிகாலையில் விசாரிப்பார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணத்தின் போது கூட.. மெரினாவில் அவரின் உடலை புதைக்க இரவில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில், காலையில் விசாரிக்கிறோம் என்று கூறி மறுநாள் காலை 8 மணிக்குதான் விசாரணை செய்தனர். ஆனால் ஓபிஎஸ் வழக்கில் இரவு முழுக்க விசாரணை நடந்தது.

    நடந்தது என்ன?

    நடந்தது என்ன?

    இந்த வழக்கில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்

    12.30 மணிக்கு - ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் டிவிஷனல் பெஞ்சில் மேல்முறையீடு செய்த மனுக்கள் கோர்ட்டில் முறையாக பட்டியலிடப்பட்டது.

    12.35 - நீதிபதி சுந்தர் மோகன் வீட்டில் வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி.

    1 - நீதிபதி வீடு முன் போலீஸ் குவிப்பு

    1.11 நீதிபதி வீடு முன் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் குவிப்பு

    2 - 2 மணி தாண்டியும் விசாரணை இல்லை.

    2.30 மணி - விசாரணை தொடர்பான ஆவணங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட வேண்டும் என்பதால் விசாரணை நடத்துவதில் தாமதம்.

    2.41 மணி - ஒரு வழியாக விசாரணை தொடங்கப்பட்டது.

    வாதம்

    வாதம்

    இதில் ஓபிஎஸ் தரப்பு அதே வாதங்களை வைத்தது, ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வரக் கூடாது. வழக்கமாக பொதுக்குழு நடத்துவது போல நடத்தலாம். ஆனால் ஒற்றை தலைமை கொண்டு வருவது தொடர்பாக சட்டம் இயற்ற முடியாது. இந்த எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு வாதம் வைத்தது.

     இபிஎஸ் சொன்னது என்ன?

    இபிஎஸ் சொன்னது என்ன?

    இதற்கு பதில் வைத்த இபிஎஸ் தரப்பு, கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம். பொதுக்குழுவிற்கே உச்சபட்சம் அதிகம் உள்ளது. எந்த விதியையும் சேர்க்கவோ நீக்கவோ பொதுக்குழுவால் முடியும். 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் கட்சி விதிகளில் மாற்றம் செய்ய முடியும். ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ உச்சபட்ச அதிகாரம் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது.

    முடிவு

    முடிவு

    இதையடுத்து வழக்கு விசாரணை அதிகாலை 4.50 மணி வரை நடைபெற்றது. இரவு முழுக்க இந்த சட்ட போராட்டம் நடந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவை நடத்த இரட்டை நீதிபதிகள் அனுமதி வழங்கினர். அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது, என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரவு முழுக்க ஓபிஎஸ் நடத்திய சட்ட போராட்டத்திற்கு இடையில் அவருக்கு இந்த சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    English summary
    How did O Panneerselvam win the AIADMK general council case against Edappadi in midnight? அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X