Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பூசாரி" பெயர் பாலாஜி.. 50 வயதாகியும் திருந்தல.. எல்லாருமே பிஞ்சுகளாம்.. மிரண்ட மடத்துக்குளம் போலீஸ்

ஆபாச வீடியோக்களை பதிவிட்ட பூசாரி கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயில் பூசாரி ஒருவரின் ஆபாசம் எல்லைமீறியதை அடுத்து, அவரை தூக்கி உள்ளே வைத்து விட்டது காவல்துறை..!

சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே இருந்து வருகின்றன.. தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்..

சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இந்த குற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை.

ஆபத்து

ஆபத்து

இந்த போக்சோ சட்டத்தின்கீழ் கைதானால், கடும் தண்டனை கிடைக்கும் என்ற போதிலும், பாலியல் சம்பவங்கள் இன்னும் குறையாமலேயே தொடர்கிறது. இப்போது ஒருவர் சிக்கி அவர் ஒரு சாமியாராம்.. சிறுமிகளிடம் சேட்டை செய்து ஆதாரப்பூர்வமாக சிக்கி கொண்டுள்ளார்.. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன்.. இவருக்கு பாலாஜி என்ற இன்னொரு பெயர் உண்டு.

 பூசாரியின் ஆபாசம்

பூசாரியின் ஆபாசம்

இந்த பூசாரிக்கு 50 வயதாகிறது.. இன்னும் கல்யாணமாகவில்லை.. இவர் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணி செய்து வருகிறார்... பூஜை நேரம் தவிர, நிறைய நேரம் ஃபேஸ்புக்கிலேயே இருப்பாராம்.. அதுகூட போலியான அக்கவுண்ட் வைத்துள்ளார்.. அதில் ஆபாச வீடியோவை மட்டும்தான் அப்லோடு செய்வாராம்.. அதிலும் வெறும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை மட்டுமே தேடிபிடித்து பதிவிட்டு வந்துள்ளார்.

 பூசாரி பாலாஜி

பூசாரி பாலாஜி

இதுகுறித்து NCMEC சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் புகார் தந்துள்ளனர்.. அந்த புகாரின் பேரில், உடுமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்... பாலாஜி பயன்படுத்திய செல்போன் நம்பர் மற்றும் ஐ பி (IP address) அட்ரஸ் வைத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்துவிட்டனர்.. போலீசார் தன்னை சுற்றி கொண்டதை பார்த்து பாலாஜி அதிர்ந்தே போய்விட்டார்.. இவர் மீது போக்சோ வழக்கு உடனடியாக பதிவு செய்யப்படது.. இப்போது பூசாரி ஜெயிலில் இருக்கிறார்.

 சிறுமிகள் வீடியோ

சிறுமிகள் வீடியோ

இப்படித்தான், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று 2 வருடங்களுக்கு முன்பு, கூடுதல் போலீஸ் டிஜிபி ரவி தெரிவித்திருந்தார்.. வியாபார நோக்கத்தில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டிஜிபி ரவி மேற்கொண்ட இந்த முயற்சியினால், ஓரளவு இந்த குற்றங்கள் குறைந்திருந்தது..

 அதிரடி போலீஸ்

அதிரடி போலீஸ்

ஒவ்வொருவரும் தங்கள் செல்போனில் இருந்த வீடியோக்களை அவசர அவசரமாக அழிக்க தொடங்கினார்கள்.. பெண் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட பலரும் வரிசையாக கைதானார்கள்.. இந்த நடவடிக்கையை நீதிபதி கிருபாகரனே, அப்போது பாராட்டியும் இருந்தார்.. இப்போது மீண்டும் தலைதூக்கா வண்ணம், பூசாரியை தூக்கி உள்ளே போட்டுள்ளது காவல்துறையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி வருகிறது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+