இல்லத்தரசிகளே ரெடியா? ஒட்டடை, சிலந்தி வலையின்றி வீட்டை காப்பது எப்படி? இதோ எளிய முறை.. அசத்துங்க
சென்னை: வீட்டின் சுவற்றில் ஏற்படும் ஒட்டடை, சிலந்தி வலை மற்றும் மின்விளக்குகளின் வெளிச்சத்துக்கு வரும் பூச்சிகளை கட்டுப்படுத்தி வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள எளிய முறை உள்ளது. இதற்கு வீட்டில் கற்பூரம் மட்டும் இருந்தாலே போதும்.
ஒவ்வொருவரும் நம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள நினைக்கிறோம். வீட்டின் தரைப்பகுதியை நாம் அவ்வப்போது சுத்தம் செய்து எப்போதும் பளிச்சென வைத்து கொள்ளலாம்.
இருப்பினும் கூட வீட்டில் உள்ள அறைகளின் சிலிங் (மேற்கூரை) பகுதியை நாம் அடிக்கடி சுத்தம் செய்வது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகள் யாருடைய கையும் படாமல் சற்று உயரத்தில் இருப்பது தான்.

ஒட்டடை, சிலந்தி வலை பிரச்சனை
இருந்தாலும் கூட தொடர்ந்து சிலிங் பகுதியை நாம் கவனிக்க தவறினால் அதில் சிலந்தி வலை, ஒட்டடை உள்ளிட்டவை ஏற்படும். இதனால் நாம் வீட்டின் தரைப்பகுதியை எப்படி சுத்தமாக வைத்து கொண்டாலும் கூட வரும் விருந்தாளிகள் வீட்டின் மேற்பகுதியை பார்த்து முகம் சுளிக்கும் சூழல் ஏற்படலாம். இதை தடுக்க வேண்டுமானாலும் நாம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என வீட்டில் உள்ள ஒட்டடையை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

பிரச்சனைக்கு தீர்வு
இதனை சிலர் முறையாக பின்பற்றி வந்தாலும், பலரும் சோம்பேறித்தனத்தால் வீட்டில் உள்ள ஒட்டடை, சிலந்தி வலையை அகற்றுவது இல்லை. இப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும். நாம் வசிக்கும் வீட்டை ஒட்டடை, சிலந்தி வலை இன்றி முழுவதுமாக சுத்தமாக வைத்து கொள்ளலாம். அதோடு லைட் போடும் போதும் வரும் பூச்சிகளில் இருந்து விடுபடலாம். எப்படி என கேட்கிறீர்களா?. உங்களுக்காக தான் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதற்கான இந்த பயனுள்ள குறிப்பை வழங்குகிறோம்.

கற்பூரம் செய்யும் மாற்றம்
வீட்டில் ஒட்டடை, சிலந்தி வலை இருந்தால் முதலில் நீங்கள் கட்டி கற்பூரம் எடுத்து கொண்டு அதனை சிறிய பாத்திரத்தில் போட்டு தூளாக்கி கொள்ள வேண்டும். அதில் தண்ணீரை ஊற்றி கரைத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒட்டடை, சிலந்தி வலை உள்ள பகுதியை முதலில் சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் கரைத்த கற்பூரத்தை காட்டன் துணியில் நனைத்துவிட்டு அந்த துணியை கொண்டு சிலந்தி வலை பின்னும் இடம் மற்றும் ஒட்டடை உருவாகும் இடங்களான வீட்டின் சுவர், சீலிங்கில் தடவினால் போதும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஏனென்றால் இந்த கற்பூரத்தின் வாசனைக்கு சிலந்தி வராது. இதன்மூலம் சிலந்தி மற்றும் ஒட்டடை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதன்மூலம் நீண்டகாலத்துக்கு ஒட்டடை, சிலந்தி பூச்சி வராமல் நம்மால் தடுக்க முடியும்.

சிறிய பூச்சிகளை கட்டுப்படுத்த..
இதற்கு ஒட்டடையை சுத்தம் செய்யும் குச்சியை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கற்பூரம் கரைத்த தண்ணீரை ஸ்பிரே பாட்டிலில் அடைத்து வைத்து ஸ்பிரே செய்து பயன்படுத்தலாம். மேலும் இந்த கற்பூர தண்ணீர் என்பது வெறும் சிலந்தியின் வருகையை மட்டுமல்ல வேறு சில சின்ன சின்ன பூச்சிகளின் வருகையை கூட கட்டுப்படுத்தும். அதாவது டியூப்லைட், மின்விளக்குகள் ஒளிரும்போது அந்த வெளிச்சத்துக்கு சிறிய பூச்சுக்கள் வரும். இதனால் அந்த மின்சாதனங்களை சுற்றி இந்த கற்பூரம் கரைத்த தண்ணீரை துணியில் தொட்டு தடவினால் பூச்சிகளின் தொல்லை இருக்காது. குறிப்பாக கற்பூரம் கலந்த தண்ணீரை மின்சாதனங்கள் அருகே கொண்டு செல்லும்போது ஸ்விட்சுகள் ஆப் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications