சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மணி நேர எச்.டி படத்தை 2 நொடியில் டவுன்லோட் செய்யலாம்.. இந்தியாவில் இனி 5ஜி.. இணையமே மாற போகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், இனிமேல் நாம் இணையம் பயன்படுத்தும் முறையே மாற போகிறது. பல புதிய வசதிகள் இதன் மூலம் நமக்கு கிடைக்க உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் முதல் கட்டமாக சேவை அமலுக்கு வந்துள்ளது. இந்த வருடம் டிசம்பருக்குள் 5ஜி சேவையை இந்தியா முழுக்க கொண்டு வருவோம் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா போன்ற நிறுவனங்கள் இதில் ஏலம் எடுத்தன.

மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 5ஜி சேவை இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது.

5 ஜி இணைய சேவை எப்படி இருக்கும்?.. பிரதமர் மோடிக்கு நேரில் டெமோ காட்டிய ஆகாஷ் அம்பானி! 5 ஜி இணைய சேவை எப்படி இருக்கும்?.. பிரதமர் மோடிக்கு நேரில் டெமோ காட்டிய ஆகாஷ் அம்பானி!

 விபரம்

விபரம்

அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் 200 நகரங்களில் 5ஜி சேவை அமலுக்கு வர உள்ளது. 80-90 சதவிகித இந்தியாவில் அடுத்த 2 வருடங்களுக்குள் 5ஜி சேவையை கொண்டு வர இந்திய தொலைத்தொடர்பு துறை முடிவு செய்துள்ளது. அடுத்த வருடம் ஆகஸ்ட் 15ம் தேதிதான் 5ஜி சேவை பிஎஸ்என்எல் மூலம் வழங்கப்படும். மற்றபடி தனியார் நிறுவனங்கள் பலவும் இன்றில் இருந்தே 5ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5ஜி சேவை மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்று இங்கே பார்க்கலாம்.

5ஜி வேகம்

5ஜி வேகம்

5ஜி தொழில்நுட்பத்தின் வேகத்தை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் 5ஜி வேகம் என்பது 20Gbps. அதாவது ஒரு நொடியில் 20 ஜிபி வரை டேட்டா பரிமாற்றம் நடக்கும். 4ஜி வேகம் என்பது 100 எம்பிபிஎஸ்தான். அப்படி என்றால் உங்களுடைய 5ஜி போன் வேகம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் 5ஜி வேகம் கொஞ்சம் இதைவிட குறைவாக இருக்கும்.. உதாரணமாக சமீபத்தில் வோடோபோன் ஐடியா 5ஜி சோதனை செய்தது. அப்போது வேகம் 5.92Gbps ஆகம் இருந்தது.

கூடுதல்

கூடுதல்

ஜியோ போன்ற நிறுவனங்கள் இதை விட கொஞ்சம் அதிக வேகத்தில் இணைப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எச்டி வீடியோக்கள், 4கே வீடியோக்களை மிக எளிதாக பார்க்க முடியும். உதாரணமாக 5ஜி மூலம் 3 மணி நேர படத்தை எச்.டியில் வெறும் 2 நொடியில் டவுன்லோட் செய்ய முடியும். இப்போது 4ஜியில் இதற்கு ஆகும் நேரம் 10-12 நிமிடங்கள் ஆகும். அதேபோல் நீங்கள் இணையத்தில் பார்க்கும் எந்த வீடியோவும் ஒரு நொடி கூட பப்பர் ஆகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கால் டிராப்

கால் டிராப்

இதன் மூலம் கால் கட் ஆகும் பிரச்சனை முற்றிலும் நின்று போகும். வீடியோ கால்கள் இன்னும் தெளிவாக இருக்கும். வீடியோ மீட்டிங் எளிதாகும். ஆன்லைன் சேவைகள் துரிதமாக நடக்கும். வேகமாக மெசேஜ்களை இணையத்தில் அனுப்ப முடியும். டெலிகிராம் போன்ற தளங்களில் கூடுதல் அளவு உள்ள பைல்களை மிக எளிதாக அனுப்ப முடியும். வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக போனுடன் இணைக்க முடியும். அவசர இணைய சேவைகள் எளிதாக வழங்கப்படும்.

கல்வி

கல்வி

கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் இனி இணையம் எளிதாக இருக்கும். புக்கிங் தளங்களில் இன்னும் வேகமாக இணையத்தை பயன்படுத்த முடியும். உற்பத்தி துறை, ஐடி துறை, மருத்துவ துறை, கல்வித்துறை, சினிமா துறை, லைப் ஸ்டைல் துறை, வேலைவாய்ப்பு துறை ஆகியவை 5ஜி காரணமாக அதிக முன்னேற்றம் அடையும். ஆனால் இப்போது நாம் பயன்படுத்தும் பல போன்களில் 5 ஜி வசதி இருக்காது. இதில் 5ஜி அப்டேட் வர சில காலம் ஆகும். புதிய போன்கள் இனி 5ஜி வசதியுடன் மார்கெட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
How will 5G service change the way we use internet in India from today?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X