Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், இதற்கான காரணத்தைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை இப்போது சரிவது தற்காலிகமானது தான் என்றும் சீக்கிரமே நிலைமை மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இஸ்ரேல் ஈரான் போர் ஏற்பட்டுள்ள சூழலில், தங்கம் விலை சரிந்து வருகிறது. தங்கம் விலை போரினால் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக தங்கம் விலை சரிந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை சரிவு தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் ஆனந்த் சீனிவாசன், "சர்வதேசச் சந்தையைக் காட்டிலும் இந்தியாவில் தங்கம் விலை சரிந்து இருக்கிறது. தங்க மார்கெட்டில் இப்போது கஷ் இல்லை. இதனால் மார்க்கெட் ரொம்ப டைட்டாக இருக்கிறது. கோல்டு மார்க்கெடில் கேஷ் இல்லை. இதனால் அறிவிக்கப்புடம் விலையைக் காட்டிலும் 300 முதல் 400 வரை தங்கம் விலை மார்கெட்டில் குறைவாகவே கிடைக்கிறது.

இது கேஷ் தேவைப்படுவோர் தங்கத்தை விற்கிறார்கள். இதை கேஷ் ஃப்ளோ சிச்சுவேஷன் என்பார்கள். மார்க்கெடில் கோல்ட் இருக்கு கேஷ் இல்லை. ஆனால், அடுத்து என்ன ஆகும்னு நான் சொல்கிறேன். வெள்ளி விலை இறக்கமடைய தொடங்கியுள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன். வெள்ளி பக்கம் போக வேண்டாம். திரும்பி அடிபட்டுட்டு அழ வேண்டாம். இந்த சான்ஸை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கையில் வெள்ளி இருந்தால் அதை விற்றுவிட்டு.. வெள்யே தப்பித்து ஓடிவுடுங்கள்

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் மிக வேகமாகச் சரிந்து வருகிறது. ரூ.92ஐ தாண்டிவிட்டது. பங்குச்சந்தையும் கடுமையான சரிவு. மார்கெட்டை அதிகரிக்க முயன்று வருகிறார்கள். அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் கூட மோசமாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட்டை கையில் வைத்திருப்பது சரியான முடிவாக இருக்காது என்பதே எனது கருத்து.

இஸ்ரேல் ஈரான் போர் தொடர்கிறது. அங்கு வாழும் பலரும் கமேனி போனது நல்லது என்றே சொல்கிறார்கள். பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கை நார்மலாகும் என்கிறார்கள். ஆனால், ஷியா முஸ்லீம்கள் உலகெங்கும் போராட்டம் நடக்கிறது. இப்படி பயங்கர டென்ஷாக இருக்கிறது.


கேஷ் இல்லை

ஆனால், தங்க மார்கெட்டில் பற்றாக்குறை எல்லாம் ஒன்னும் இல்ல.. கேஷ் இல்லாததே சிக்கலுக்குக் காரணம். ஆனால் மார்க்கெட் என்ன சொல்கிறார்கள் என்றால்.. கையிருப்பில் உள்ள தங்கம் மற்றும் வைரம் குறைந்துவிடும் என்கிறார்கள். ஏனென்றால் துபாய் தான் தங்கத்திற்குப் பெரிய மார்கெட்டாக இருக்கிறது. ஹார்முஸ் வழித்தடம் பிளாக் ஆகிவிட்டது என்றால் சிக்கல் தான். அங்கு விமானச் சேவையைக் கூட ஏற்கனவே முடக்கிவிட்டார்கள்.

சீக்கிரமே மாறும்

இதுதான் நிலைமை. மத்திய கிழக்கில் இருந்து வரும் தங்கம் குறைந்துவிட்டது என்றால் பற்றாக்குறை ஏற்படும். இதனால் சீக்கிரமே தங்கம் விலை எகிற ஆரம்பித்துவிடும். அதேபோல ஹார்முஸ் வழித்தடம் முடங்கும்போது கச்சா எண்ணெய் விலை உயரும். இதனால் நமது பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+