CM ஆகணுமா? அப்ப இத பண்ணுங்க.. அறிவு இருக்குறவங்கள அனுப்பணும்! தவெக-வை தெறிக்கவிட்ட ரஞ்சனா நாச்சியார்
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் நடிகர் விஜய்யின் தவெக படு சுறுசுறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.. தமிழகம் முழுவதும் நேற்று மாவட்டத் தலைநகரங்களில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது?
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் நேற்றைய தினம் மாபெரும போராட்டம் நடைபெற்றது.. கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முயற்சியாகவே இந்த போராட்டம் பார்க்கப்படுகிறது.

தவெக விஜய்
தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்த இந்த போராட்டத்தின் பின்னணியில் மிக முக்கியமான இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது.
2வதாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதாகும். மாநிலம் முழுவதும் திரண்ட தொண்டர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டது, விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒரு முன்னோட்டமாகவே கருதப்பட்டது.
எனினும், கட்சியின் தலைவர் விஜய் நேரடியாகப் பங்கேற்காமல், நிர்வாகிகள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது வேறு விஷயம்.
சினிமா வசனம் பேசும் இடமல்ல
இந்த சூழலில்தான் ரஞ்சனா நாச்சியாரின் கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னைச் சுற்றி உண்மையான அறிவுடையவர்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருபபது, விஜய்யின் ஆலோசனை குழுவை நேரடியாகத் தாக்குவது போல் அமைந்துள்ளது.
"அரசியல் என்பது சினிமா வசனம் பேசும் இடம் அல்ல, இது பொறுப்புடன் செயல்பட வேண்டிய மேடை" என்று அவர் குறிப்பிட்டிருப்பது, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் வழக்கமான விமர்சனமாக இருந்தாலும், ரஞ்சனா நாச்சியாரின் குரல் இதில் மிகவும் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவு இருப்பவர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும், கடின உழைப்பு இன்றி அந்த இலக்கை அடைய முடியாது என்றும் அவர் தெறிக்கவிட்டுள்ளார்.
வொர்த் இல்லை
விஜய் கடந்த வாரம் பேசிய "வொர்த் இல்லை" என்ற கருத்துக்கு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்திருந்த ரஞ்சனா நாச்சியார், இப்போது மீண்டும் அவரை விமர்சித்திருப்பது தற்செயலானதாக தெரியவில்லை. அரசியல் என்பது வெறும் கூட்டங்களைக் கூட்டுவது மட்டுமல்ல, மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஞ்சனா நாச்சியார் விரைவில் திமுகவில் இணையப் போவதாகக் கசிந்து வரும் செய்திகள், இந்த விமர்சனங்களுக்குப் பின்னால் ஒரு அரசியல் வியூகம் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவர் ஆளுங்கட்சியின் குரலாக மாறி விஜய்யை விமர்சிக்கிறாரா அல்லது ஒரு தனிப்பட்ட விமர்சகராக செயல்படுகிறாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
ரஞ்சனா நாச்சியார்
தற்போதைய நிலையில், தவெக-வின் இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடையே எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை விட, ரஞ்சனா நாச்சியார் போன்றவர்களின் விமர்சனங்கள் கட்சியின் பிம்பத்தை எப்படிப் பாதிக்கப்போகிறது என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
அரசியல் களம் என்பது எப்போதுமே முட்கள் நிறைந்த பாதை என்பதை இந்த மோதல்கள் உணர்த்துகின்றன. வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு நகரும் விஜய்க்கு, இதுபோன்ற விமர்சனங்கள் ஒரு பாடமாகவும், அதே சமயம் அவர் தனது அரசியல் வியூகத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது...!!
-
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு












Click it and Unblock the Notifications