பிரபாகரன் புகைப்படம் எடிட்.. ஹார்ட் டிஸ்கை சீமானிடம் கொடுத்ததே நான்தான்.. ராஜீவ் காந்தி ஒரே போடு!
சென்னை: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்த பின் ஹார்ட் டிஸ்கில் கொண்டு சென்று கொடுத்தது நான் தான் என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் எடிட் செய்த விவகாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், ராஜீவ் காந்தி புதிய விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பெரியாரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பெரியாரை விமர்சித்து வருகிறார். இவருக்கு பெரியாரிய ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும், அவரின் முற்றுகையிட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான், நான் பிரபாகரனுடன் நான் எடுத்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு பதிலடி கொடுத்தார். அதற்கு சங்ககிரி ராஜ்குமார், எடிட் செய்த புகைப்படம் என்பதே ஆதாரம் தான். ஆதாரத்திற்கு ஆதாரமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர். இதற்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, திமுகவில் இணைந்து மாணவரணி தலைவராக உள்ள ராஜீவ் காந்தி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து ராஜீவ் காந்தி பேசுகையில், ஒரு மாவீரரை சமையல்காரராக சீமான் மாற்றி வைத்துள்ளார்.
வேறு எதையும் அவர் செய்யவில்லை. வெங்காயம் படத்தை இயக்கிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக ஒரு படத்தை வெளியிட்டார். செங்கோட்டையன் என்ற நபர் தான் புகைப்படத்தை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். செங்கோட்டையன் என்பவர் இப்போது உயிருடன் இல்லை. செங்கோட்டையன் டிடி என்கிற ஹார்ட் டிஸ்க் கொடுத்த போது, வேகமாக போய் வாங்கினார்.
அதனை வாங்கியது ராஜீவ் காந்தி தான். அப்போது உள்ளே பார்த்த போது, புகைப்படம் இருந்தது. படம் எடுக்க சென்னை வந்தேன் என்பது அன்று தான் தெரிந்தது. வெட்டி ஒட்டிய படங்கள். அதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டோம். எடிட் செய்தது என்பதையும் கூறிவிட்டோம். இதனை சீமானிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications