“முடிஞ்சா கால வெட்டி பாரு.. நான் மும்பை வரத்தான் போறேன்”- சிவசேனா, ராஜ் தாக்கரேவுக்கு அண்ணாமலை சவால்
சென்னை: மகாராஷ்டிரா தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலையை விமர்சித்து ராஜ் தாக்கரே பேசியிருந்த நிலையில் அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். "நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். INK அடித்துப் பாருங்கள்; மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்" என அண்ணாமலை கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மும்பை மாநகரம் மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது அல்ல என்றும் அது சர்வதேச நகரம் என்றும் பேசி இருந்தார். அவரது இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

அண்ணாமலையின் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ், அண்ணாமலை மீது கிரீமினல் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நேற்று பிரசாரக் கூட்டத்தில் பேசிய நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, அண்ணாமலையை காட்டமாக விமர்சித்தார். "தமிழ்நாட்டில் இருந்து வந்த ரசமலாய் மும்பை பற்றி பேசுகிறார், அதனால் தான் உங்களை பால் தாக்கரே விரட்டி அடித்தார்" எனப் பேசினார்.
உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதப்பட்டிருந்தது.
"பாஜக அண்ணாமலை மீண்டும் மகாராஷ்டிராவில் கால் வைத்தால், மராத்தி ஏகிகரன் சமிதி அவர் முகத்தில் கருப்பு மை வீசும். மகாராஷ்டிராவுக்கு வந்து துரோகம் இழைக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாராஷ்டிராவை இழிவுபடுத்துவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. மகாராஷ்டிராவின் தியாகிகளையும் மராத்தி மக்களையும் அவமதித்ததற்கு, அண்ணாமலை உடனடியாக மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அண்ணாமலை, "ராஜ் தாக்கரே போன்றவர்கள் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன். வேலை இல்லாமல் சிலர் அங்கிருந்து என்னை பற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர், மிரட்டிக் கொண்டிருக்கின்றனர். என் தாய், தந்தையர் ஆடு மாடு மேய்ப்பவர்கள். அவர்களின் மகனான என்னை மும்பையில் கூட்டம் போட்டு திட்டுகின்றனர்.
நான் மும்பைக்குள் கால் எடுத்து வைத்தால் காலை வெட்டுவேன் என ராஜ் தாக்கரே கூறியிருக்கிறார். தாக்கரே குடும்பத்தினர் ஒரு விவசாயி மகனாகிய என்னை மிரட்டுகின்றனர். யார் மிரட்டினாலும் நான் மும்பை செல்வதை தடுக்க முடியாது. நான் மும்பைக்கு வருவேன், வரத்தான் போகிறேன். முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம். இங்க் அடித்துப் பாருங்கள்.
மிரட்டி, மிரட்டியே வாழ்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை, அதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். என்னை விமர்சிப்பதாக தமிழர்கள் குறித்து கொச்சையாக, அவதூறாக சிவசேனா கட்சி விமர்சிக்கிறது. மும்பைக்கு வரத்தான் போகிறேன். முடிந்தால் சிவசேனா கட்சியினர் என் காலை வெட்டிப் பார்க்கட்டும்" எனக் கூறியுள்ளார்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications