தகுதியற்றவரின் தவறான தகவலுக்கு பதிலளிக்க மாட்டேன்.. அண்ணாமலைக்கு பிடிஆர் பரபர பதிலடி.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பட்ஜெட்டில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அவரின் அறியாமை என்றும் நான் பொய் சொல்வதாக நினைத்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, செய்தித் தொடர்பாளர் நாராயண் திருப்பதி, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை குற்றச்சாட்டு
இதில் பேசிய அண்ணாமலை தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், "தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.16,500 கோடி என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். ஆனால், இறுதி நிலுவைத் தொகையையும் மத்திய அரசு வழங்கிவிட்டது." என்றார்.

தவறான தகவலுக்கு பதிலளிக்க மாட்டேன்
இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு பட்ஜெட் ஆவணங்களை முழுமையாக படிக்க வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் "தகுதியற்ற நபர்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் தவறான தகவல்களுக்கு பதிலளிப்பது என் வேலை இல்லை.

அண்ணாமலையின் அறியாமை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அது அண்ணாமலையின் அறியாமை. நான் பொய் சொல்லி இருப்பதாக நினைத்தால் அவர் நீதிமன்றத்தை நாடலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய நிதித்துறை செயலாளருடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியாதையுடன் நடந்து கொண்டோம்.

ரூ.28,000 கோடி நிலுவைத் தொகை
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நான் டெல்லி சென்றேன். அங்கு மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் பட்ஜெட் தொடர்பாக ஆலோசித்தேன். கணக்கு வழக்குகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்த பேச்சுவார்த்தையின்போது யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வந்துவிட்டோம். அதன்படி தமிழ்நாடுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.28,000 கோடி" என அவர் கூறினார்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications