தென்மேற்குப் பருவமழை தேனியில் 292% அதிகம்..இயல்பை விட கூடுதல்..இன்னும் மழை இருக்கு!
சென்னை: தென்மேற்குப்பருவமழை தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக கொட்டித்தீர்த்த நிலையில் செப்டம்பரிலும் மழை கொட்டித்தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாதம் மும்மாரி மழை என்று முற்காலத்தில் சொன்னது போல தென்மேற்குப்பருவமழை மே மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கிறது.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். பொதுவாக தென் மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை அதிக அளவில் பெய்யும்.
ஆண்டு மழைப்பொழிவில் பெரும்பான்மையான மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பெறும். வட மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தான் நீர்நிலைகள், விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன. புயல், மழை வெள்ளம் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் வட மாவட்டங்களை மிரட்டிப்பார்க்கும்.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வரும், தென்மேற்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது.

தென்மேற்குப்பருவமழை
நடப்பு ஆண்டிலும் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவுபெற இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தமிழகத்தில் இயல்பைவிட 88 சதவீதம் அதிகமாக பரவலாக மழை கிடைத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி இருப்பது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கும் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

இயல்பை விட அதிக மழை
இதில் 18 மாவட்டங்களில் இயல்பைவிட 100 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பொழிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தேனியில் 292 சதவீதம் அதிகம் மழை கிடைத்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் இதுவரை தென்மேற்குப் பருவமழை 55 செ.மீ. அளவு பதிவாகியுள்ளது இது 292 சதவீதம் அதிகமாகும். நீலகிரி மாவட்டத்தில் 170 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 155 சதவீதம் அதிகமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51 செ.மீ மழை பெய்துள்ளது இது இயல்பை விட 147 சதவீதம் அதிகமாகும்.

கோவை, நீலகிரி
கோவையில்118.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 109% அதிகமாகும். தர்மபுரியில் 47 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 110% அதிகமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 136% அதிகமாகும். ஈரோடு மாவட்டத்தில் 36 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது இயல்பை விட 131 சதவீதம் அதிகமாகும். திருப்பூர் மாவட்டத்தில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 177 சதவீதம் அதிகம், திருவாரூர் மாவட்டத்தில் 40 செ.மீ. மழை பதிவாகியுள்ளது 113 சதவீதம் அதிகமாகும். கரூர் மாவட்டத்தில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது இது இயல்பை விட 116 சதவீதம் அதிகமாகும். நாமக்கல் மாவட்டத்தில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 105 சதவீதம் அதிகமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் 40 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 155 சதவீதம் அதிகமாகும்.

தென் மாவட்டங்கள்
மதுரையில் 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 144 சதவீதம் அதிகமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் 104 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது இது 125 சதவீதம் அதிகமாகும். சிவகங்கை மாவட்டத்தில் 51 செ.மீ. பதிவாகியுள்ளது இது 146 சதவீதம் அதிகமாகும். தூத்துக்குடியில் 188 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 128 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

மழை அதிகரிக்க காரணம் என்ன?
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும், மற்ற மாவட்டங்களில் இயல்பைவிட சற்று அதிகமாகவும் மழை பதிவாகியிருப்பதும் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
தென்மேற்கு பருவகாற்று, ஈரப்பதம் குவிதல், வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும்
இதனிடையே தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் மாதத்திலும் வெளுத்து வாங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை IMD இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே விடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். செப்டம்பர் 7 ஆம் தேதி பருவமழை தெற்கு நோக்கி நகரும். இது மத்திய மற்றும் வட தீபகற்ப இந்தியாவில் மழைப்பொழிவு நடவடிக்கையை அதிகரிக்கும் என்று மொஹபத்ரா கூறினார். எனவே, பருவமழை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்றும் வானிலை அலுவலகம் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இன்னும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளதால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications