முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.. கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகிறதா?
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடக்கிறது
சென்னை: தற்போது தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மேலும் பல்வேறு தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும், இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்... இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க அரசின் சார்பில் நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை.. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும்போது, அதற்குள் ஒமிக்ரான் என்ற புது வைரஸ் இந்தியாவில் நுழைந்துள்ளது.

ஒமிக்ரான்
இது நல்ல பலனை தந்து வருகிறது.. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருகின்றனர்.. ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்... இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வெளிமாநிலம்
இதுவரை கொரோனாவைரஸ் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,35,389 ஆக உள்ளது.. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,59,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,91,054 ஆகும்.. நேற்றைய தினம், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 70,39,233 பேர் வந்திருக்கிறார்கள்.. சென்னையில் 116 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தளர்வுகள்
எனினும் தொற்று குறைந்து வந்து கொண்டிருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது... இதையடுத்து, மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இப்போது வாரத்தில் 2 நாட்களாக அதிகரித்து நடத்தப்பட்டு வருகிறது.

இன்று ஆலோசனை
இது நல்ல பலனை தந்து வருகிறது.. பொதுமக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்ள வருகின்றனர்.. ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்... இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒமிக்ரான்
இந்த கூட்டத்தில், ஒமிக்ரான் வேகமாக பரவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.. பக்கத்து மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுக்கு வந்துவிட்ட ஒமிக்ரான் தமிழ்நாட்டிற்கு எப்படியும் வந்துவிடும் என்பதால் அது குறித்து எடுக்கப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார்.

ஒமிக்ரான்
இந்த கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும் முற்றிலும் இல்லை என்று சொல்ல முடியாது.. ஒமிக்ரான் பக்கத்து மாநிலங்களுக்கு வந்துவிட்டதால் தமிழகத்திற்குள் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.. அனைத்து சர்வதேச ஏர்போர்ட்களிலும், கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. ஒவ்வொரு மாவட்டங்களிலும் மக்கள் முககவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்" என்றார்.

அதிகாரிகள்
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கலாமா? அல்லது தமிழகத்தில் இப்போது உள்ள கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது பற்றியும் அதிகாரிகளின் கருத்துக்களை முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க அரசின் சார்பில் நாளை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications