ருத்துராஜுக்கு நேர்ந்த அநீதி.. மும்பை வீரருக்கு முன்னுரிமை தந்த ரோஹித்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் ருத்துராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி ஆடிக்கொண்டு இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுவிட்டது.
இதனால் டி 20 தொடரில் இந்திய அணி ஏற்கனவே வென்றுவிட்டது. இன்றைய போட்டியிலும் வென்று நியூசிலாந்தை வாஷ் அவுட் செய்ய இந்தியா முயலும்.

ரோஹித்
ரோஹித் சர்மா கேப்டன்சி, டிராவிட் பயிற்சிக்கு கீழ் இந்திய அணி முதல் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்திய அணியின் புதிய டி 20 இன்னிங்சாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

டாஸ்
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கிற்கு பதிலாக பேட்டிங் தேர்வு செய்தார். சமீப காலமாக பனி காரணமாக கேப்டன்கள் எல்லோரும் டாஸ் வென்றால் பவுலிங்தான் தேர்வு செய்கிறார்கள். இன்றும் மைதானத்தில் நிறைய பனி இருந்தது.

ரிஸ்க்
அனால் ரோஹித் சர்மா ஆச்சர்யமாக இன்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இன்று இஷான் கிஷான், சாஹல் அணியில் சேர்க்கப்பட்டனர். ரோஹித், இஷான், வெங்கடேஷ் ஐயர், சூரியகுமார் யாதவ், பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், சாஹல், புவனேஷ்வர் குமார், சாகர், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் அணியால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏன்
இந்திய அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் சேர்க்கப்படவில்லை. அவரை ஓப்பனிங் இறங்கிவிட்டு மிடில் ஆர்டரில் இஷானை கொண்டு வருவார்கள் என்றே எதிர்பார்கப்பட்டது. ஆனால் ருத்துராஜ் இன்று அணியில் எடுக்கப்படவில்லை. இதனால் இந்திய அணியில் இரண்டாவது சாய்ஸ் ஓப்பனர் இஷான் கிஷான்தான் என்று உறுதியாகி உள்ளது.

ராகுல்
அணியில் ராகுல், ரோஹித் இல்லை என்றால் இஷான்தான் ஓப்பனிங் சாய்ஸ் என்பது உறுதியாகி உள்ளது. அதே சமயம் நெட்டிசன்கள் பலர் ருத்துராஜூக்கு இழைக்கப்பட்ட அநீதி இது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். சையது முஸ்தாக் தொடரில் அவர் சிறப்பாக ஆடினார். ஐபிஎல்லில் இவர்தான் டாப் ரன் ஸ்கோரர். இப்போது இந்தியாவில் டாப் பார்மில் இருக்கும் ஓப்பனர் அவர்.

வாய்ப்பு
ஆனால் இஷான் கிஷான் அவ்வளவு பார்மில் இல்லை. ஐபிஎல்லில் பெரிதாக ஆடவில்லை. டி 20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அப்படி இருக்கும் போது ருத்துராஜை புறக்கணித்துவிட்டு இஷான் எடுக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

மும்பை
ருத்துராஜூம் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்தான். ஆனால் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுகிறார். இதனால் ரோஹித் சர்மா அவருக்கு முன்னுரிமை கொடுக்கிறாரோ.. இதுதான் அவரை அணியில் எடுக்க காரணமோ என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications