உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியா.. இதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.. ஸ்டன் ஆன வல்லரசுகள்
சென்னை: உலகம் முழுக்க இருக்கும் முக்கியமான பல நாடுகளுக்கு இந்தியா தொடர் வளர்ச்சியின் மூலம் ஷாக் கொடுத்துள்ளது.
உலகப் பொருளாதார தரவரிசையில் இந்தியா இப்போது ஜப்பானை ஓவர்டேக் செய்து 4வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், இதே நிலை தொடர்ந்தால் விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக மாறும் வாய்ப்பும் கூட பிரகாசமாக இருப்பதாக நிதி ஆயோக்கின் சுப்ரணியம் தெரிவித்துள்ளார். இப்போது நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனிக்கு பிறகு நான்காவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியா மீண்டும் அதிக வளர்ச்சியை அடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இதற்காக அந்த நிதியம் வெளியிட்டு உள்ள கணிப்பில் இந்தியாதான் உலகில் இந்த வருடம் அதிக வளர்ச்சியை சந்திக்கும் நாடாக இருக்கும் என்று கூறி உள்ளனர். இந்த நிதி ஆண்டில் இந்தியா 6.2 சதவிகிதம் வளர்ச்சி அடையும். சீனாவின் வளர்ச்சியை விட 2.2 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சியை இந்தியா சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டு உள்ளது.

இந்தியா: 6.2% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
அர்ஜென்டினா: 5.5% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
இந்தோனேசியா: 4.7% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
சீனா: 4.0% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
எகிப்து: 3.8% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
நைஜீரியா: 3.0% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
சவுதி அரேபியா: 3.0% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
துருக்கி: 2.7% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
பாகிஸ்தான்: 2.6% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
பிரேசில்: 2.0% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
தென்னாப்பிரிக்கா: 1.0% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
இதில் சீனா உள்ளிட்ட முக்கியமான நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளி உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் வளர்ச்சி 1 சதவிகிதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஜிடிபி கொண்ட நாடு ஆகும். அதை இந்தியா பின்னுக்கு தள்ளும் சூழல் இதனால் ஏற்படலாம்.
சர்வதேச அளவில் சீனாவிற்கு போட்டியாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதனால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இன்னும் தனிமனித வருமானம் உயரவில்லை. ஜிடிபி உயர்ந்தாலும் தனி மனித அளவில் அது பெரிய பலனை அளிக்கவில்லை. ஜப்பானை விட நாம் இதில் பல மடங்கு குறைவாக உள்ளோம் . கிட்டத்தட்ட 200 மடங்கு குறைவான சம்பளத்தையே இந்தியர் ஒருவர் ஜப்பானியர் ஒருவருடன் ஒப்பிடுகையில் பெறுகிறார்.
இந்தியா வளர்ச்சி அடைய அடைய அதுவும் சரி செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் கேட்க தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications