சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவ்வளவு வன்மமா?.. கோலியின் சூசக பேச்சு.. ஒரு தமிழரை இன்னொரு தமிழருக்கு எதிராக முன்னிறுத்த திட்டம்?

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின் பெங்களூர் கேப்டன் கோலி கொடுத்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 19 ஓவரில் வெறும் 92 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனர் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆடினார்கள்.

இதன் மூலம் வெறும் 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. இதில் கொல்கத்தா அணியில் ஆடும் தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி பிளேயர் ஆப் தி மேட்சாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று சச்சின் பேபி, மேக்ஸ்வெல், ஹஸரங்கா ஆகியோரின் விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார்.

மே.வங்கம்: 'கோமியம்' புகழ் திலீப் கோஷ் தூக்கியடிப்பு-புதிய பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தார் நியமனம்!மே.வங்கம்: 'கோமியம்' புகழ் திலீப் கோஷ் தூக்கியடிப்பு-புதிய பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தார் நியமனம்!

மூன்று விக்கெட்

மூன்று விக்கெட்

இவர் வீசிய 12வது ஒவர்தான் ஆட்டத்தை மாற்றியது. அந்த ஒரே ஓவரில் மேக்ஸ்வெல், ஹஸரங்கா ஆகியோர் விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார். பின்னர் 14வது ஓவரில் மீண்டும் சச்சின் பேபி விக்கெட்டை வருண் வீழ்த்தினார். மிஸ்ட்ரி ஸ்பின் பவுலரான வருண் நேற்று போட்ட 4 ஓவரும் மிகவும் சிறப்பாக இருந்தது. பந்தை டாஸ் செய்து ஸ்டம்பிற்கு வெளியே வீசுவது போல வீசிவிட்டு கடைசி நேரத்தில் பந்தை ஸ்டம்பை நோக்கி திருப்பும் இவரின் வித்தையை கணிக்க முடியாமல் நேற்று பெங்களூர் சுருண்டு விழுந்தது.

கோலி பாராட்டு

கோலி பாராட்டு

நேற்று போட்டிக்கு பின்பு கோலியும் கூட வருணை பாராட்டி இருந்தார். வருண் சக்ரவர்த்தி ஆட்டம் சிறப்பாக இருந்தது. நாங்கள் பெவிலியனில் இருந்து அதை ரசித்துக்கொண்டு இருந்தோம். இந்தியாவின் துருப்பு சீட்டாக அவர் வரும் டி 20 உலகக் கோப்பையில் இருக்க போகிறார். இது போன்ற ஆட்டங்களை இந்தியாவின் இளம் வீரர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்திய அணி தொடர்ந்து வலிமையாக இருக்க இது போன்ற திறமைகள் உதவும். அவர் இந்திய அணிக்காக விரைவில் ஆட உள்ளார். இது இந்திய அணிக்கு மிக சிறந்த அறிகுறி என்று வருணை கோலி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

Recommended Video

    Natarajan On Missing Out On India’s T20 World Cup Squad | OneIndia Tamil
    வாய்ப்பு

    வாய்ப்பு

    இதனால் உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் வருணுக்கு கோலி அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா, அஸ்வின், ராகுல் சாகர், அக்சர், வருண் என்று ஐந்து ஸ்பின் பவுலர்களை இந்தியா இந்த தொடருக்கு தேர்வாகி உள்ளது. வருணுக்கு கோலி கொடுத்துள்ள இந்த குட் சர்டிபிக்கேட் காரணமாக அவர் கண்டிப்பாக ஆடும் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வினுக்கு இதனால் டி 20 போட்டியில் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்றே கருதப்படுகிறது.

    அஸ்வின்

    அஸ்வின்

    தமிழ்நாடு வீரரான அஸ்வினுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் இன்னொரு தமிழ்நாடு வீரரான வருணுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வருணை அஸ்வினுக்கு எதிராக கோலி முன்னிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கு முன்பு வரை டி 20 அணியில் அஸ்வினுக்கு பதிலாக இன்னொரு தமிழ்நாடு வீரரான சுந்தரை கோலி முன்னிறுத்தி வந்தார். ஆனால் சுந்தர் காயம் காரணமாக ஆடாத நிலையில் அஸ்வினின் வாய்ப்பு பிரகாசம் ஆனது.

     வருண் பாராட்டு

    வருண் பாராட்டு

    ஆனால் தற்போது வருணை பாராட்டி அஸ்வினுக்கு சூசமாக கோலி எண்ட் கார்ட் போட்டு இருப்பதாக தோன்றுகிறது. அதாவது வருணை முன்னிறுத்தி அஸ்வினை ஆடும் அணியில் எடுக்காமல் கோலி புறக்கணிக்கும் வாய்ப்புகள் உள்ளன... ஏற்கனவே இது போல அஸ்வின் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். கோலி அஸ்வின் இடையில் புகைச்சல் இருப்பது பல வருட செய்திதான்.

    வன்மம்

    வன்மம்

    தோனி கேப்டன்சியில் இருந்து விலகியதும் கோலி அஸ்வினை ஓரம் கட்டினார். ஆப் ஸ்பின் பவுலர்களை ஓரம் கட்டிவிட்டு மொத்தமாக லெக் ஸ்பின் பவுலர்களை களமிறங்கினார். டி 20, 50 ஓவர் போட்டிகளில் அஸ்வினை ஓரம் கட்டினார். உலகக் கோப்பை 50 ஓவர் ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் கூட அஸ்வினை அவ்வப்போது உட்கார வைத்தார். ஆனால் அஸ்வின் இன்றி டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியாத நிலை ஏற்படும் போது மீண்டும் அஸ்வினை களமிறக்கி கோலி வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

    இங்கிலாந்து தொடர்

    இங்கிலாந்து தொடர்

    சமீபத்தில் கூட இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து அஸ்வினை கோலி புறக்கணித்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைய கூட ஒரு வகையில் அஸ்வின் இல்லாதது காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது உலகக் கோப்பை டி 20 போட்டியிலும் கூட அஸ்வினை ஓரம்கட்டுவதற்கு இப்போதே கோலி தயாராகிவிட்டது போல தோன்றுகிறது. பெரும்பாலும் டி 20 உலகக் கோப்பை தொடரில் வருண், அக்சர் மற்றும் ஜடேஜா ஆகியோரை கோலி அதிக அளவில் முன்னிறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    IPL 2021: RCB captain Kohli's speech on Varun Chakravarthy may not be a good signal for Ashwin in T20 world cup.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X