Irfan's view சேனலுக்கான தடையை நீக்கியது யூடியூப் நிறுவனம்.. We are back என மகிழ்ந்த இர்பான்
சென்னை: உணவு விமர்சகரும் பிரபல யூடியூபருமான இர்பானின் இர்பான்ஸ் வியூ எனும் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த சேனலுக்கான தடை நீக்கப்பட்டது.
Recommended Video
யூடியூபரின் இர்பான்ஸ் வியூ சேனல் நேற்று இரவு முடக்கப்பட்டது. இதனால் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது இர்பான் சேனலுக்கான தடையை யூடியூப் நீக்கியது. இதை இர்பானே ஒரு வீடியோவை வெளியிட்டு We are back என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் தனது வீடியோ பதிவில் கூறுகையில், சுமார் 15 அல்லது 16 மணி நேரத்திற்கு பிறகு சேனல் மீதான தடை நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், சேனல் நேற்று மாலை 5.56 மணிக்கு டெர்மினேட்டட் என வந்தது. இதையடுத்து நான் யூடியூப்பில் முறையீடு செய்தேன்.

மெயில்
நிறைய மெயில்கள் மூலம் அவர்களுக்கு விளக்கமளித்தேன். அதன்பிறகு இன்று (மார்ச் 30) எனது சேனல் மீதான தடையை நீக்கியதாக மதியம் 1.07 மணிக்கு ஒரு மெயில் வந்தது. அதில் community guidelines விதிகளை மீறவில்லை என்பதை நாங்கள் மீண்டும் ஆய்வு செய்த நிலையில் உங்கள் சேனல் மீதான தடையை நீக்குகிறோம் என மெயிலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த சேனல் முடக்கத்தால் நேற்று முதல் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். இந்த சேனலுக்காக கடுமையாக உழைத்திருந்தேன். அதன் பலன் வீணாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. மனம் உடைந்து போய்விட்டேன். கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இது போல் மனம் உடைந்திருந்தேன். அதோடு இந்த சேனல் முடக்கத்திற்காகத்தான் மிகவும் வருந்தினேன்.

உழைப்பை மதிங்க
தற்போது நான் எந்த தவறையும் செய்யவில்லை என்பதை அறிந்த யூடியூப் நிறுவனம் எனது சேனல் மீதான தடையை நீக்கியது. எனது சேனல் முடங்கியதற்காக சில பேர் மகிழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன், life is very short. எனவே அடுத்தவர் உழைப்பை மதித்து மகிழ கற்றுக் கொள்ளுங்கள்.

இன்று முதல் இர்பான் வீடியோ
இன்று முதல் நான் வீடியோ போட தொடங்குவேன். இனியாவது யூடியூப் இது போல் விளக்கம் கேட்காமல் தானாகவே முடக்குவதை தவிர்க்க வேண்டும். இப்போதுதான் மன நிம்மதியாக இருக்கிறது. எனக்காக ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி என இர்பான் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வீடியோவில் We are back என குறிப்பிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications