சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தமா டேமேஜ்.. "அவர்" தான் குறி.. கராத்தேவின் அசைன்மெண்ட்.. முருகனின் திருவிளையாடல்!

Google Oneindia Tamil News

சென்னை: கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்துவிட்டார்... இனி அவரது அரசியல் எப்படி இருக்க போகிறது? அவரை பாஜக எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.

ரஜினி மீது அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் வைத்திருப்பவர் கராத்தே தியாகராஜன்.. ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் மிக மிக முக்கியமானவர்.. ஒருகட்டத்தில் ரஜினி முதல்வர் என்று இவரும் சொன்னவர்தான்

இதற்காகவே ரஜினியை நம்பி காங்கிரஸை கூட துரத்தி விட்டு வந்தவர்... ஆனால், ரஜினி தன், அரசியலில் ஜகா வாங்கிவிடவும் அதிர்ந்து போய்விட்டார்..

பாஜக

பாஜக

இதற்கு பிறகு இன்று எங்கு போவது, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தார்.. பிறகு, அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக சொன்னார்.. இதற்கடுத்து, அதிமுக அல்லது பாஜகவில் இணையலாம் என்றும் தகவல்கள் கசிந்த நிலையில், நேற்று பாஜகவில் கராத்தே தியாகராஜன் இணைந்தே விட்டார்..

காங்கிரஸ்

காங்கிரஸ்

சிறந்த அரசியல்வாதி மட்டுமல்ல, திறமையான கராத்தே பயிற்சியாளராவார்... அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் ஏற்கனவே இருந்தவர்.. சென்னை மாநகர முன்னாள் மேயராகவும் இருந்தவர்.. அதிக காலம் இவர் இருந்தது காங்கிரஸ் கட்சியில்தான்.. சென்னை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஒருவேளை ரஜினி கட்சி தொடங்கி இருந்தால், கராத்தே தியாகராஜன் அவருக்கு மிகப் பெரிய பலமாக இந்நேரம் திகழ்ந்திருப்பார்.. மறைந்த வெற்றிவேல் டிடிவி தினகரனுக்கு இருந்ததுபோலவே, கராத்தேவும் இருந்திருப்பார்.

 எல்.முருகன்

எல்.முருகன்

இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை பாராட்ட வேண்டி உள்ளது.. காரணம், நேர் எதிரி கட்சிதான் காங்கிரஸ்.. அதே காங்கிரஸின் பிரபல தலைகள்தான் குஷ்பு, கராத்தே தியாகராஜன் போன்றவர்கள்.. சித்தாந்த ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும், முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை உடையவர்களை எப்படி பாஜகவுக்குள் முருகனால் கொண்டு வந்திருக்க முடியும் என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.. இதற்கு தீவிர காங்கிரஸ் தொண்டராக இருந்த சிவாஜி கணேசன் மகன் ராம்குமாரும் விலக்கல்ல.

பாஜக

பாஜக

தமிழக பாஜகவை திறம்பட நடத்தியதில் தமிழிசைக்கு எப்போதுமே ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.. அதை இந்த இந்தியாவே மறுக்க முடியாத உண்மை.. அந்த அளவுக்கு இல்லையென்றாலும், முருகனின் வியூகம் வேறு விதமானது.. இதுபோன்ற தேர்தல் நேரத்தில் இதுமாதிரியான அதிரடிகளும் ஒரு தேசிய கட்சிக்கு தேவையாக இருக்கிறது.

 மேயர்

மேயர்

அதேசமயம், புதிதாக கட்சியில் சேர்ந்துள்ள கராத்தேவிடம் சில முக்கிய அசைன்மென்ட்டுக்களை பாஜக தரப்பு தந்திருப்பதாக தெரிகிறது. அது ஒரே டார்கெட் ஸ்டாலின்தான்.. காரணம், ஸ்டாலின் சென்னை மேயராக இருந்ததில் இருந்து அருகில் இருந்து ஒவ்வொன்றையும் பார்த்தவர் கராத்தே.. ஸ்டாலினின் மூவ்கள், ஸ்டாலினின் அரசியல், ஸ்டாலினின் நண்பர்கள் என மொத்தமும் கராத்தேவுக்கு அத்துபடி.. அதனால், இந்த தேர்தலில் ஸ்டாலினை குறி வைத்தே, விமர்சன கணைகள் பாயும் என்று தெரிகிறது. இதற்காக முக்கிய பதவியும் கராத்தேவுக்கு அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இப்படித்தான் குஷ்புவுக்கும் அசைன்மென்ட் தரப்பட்டது.. திமுகவில் அவர் இருந்தபோது எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்? எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டார்? என்பதை பிரச்சாரங்களில் கிழித்தெறியும்படி பாஜக தெரிவித்திருந்ததாகவும், அதனாலேயே குஷ்பு ஸ்டாலினையும், உதயநிதியையும் சீண்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த லிஸ்ட்டில் கராத்தே தியாகராஜனும் இணைகிறார் போலும்.. எப்படியோ பாஜக விறுவிறு களத்தில் ஆட்டத்தை துவங்கி உள்ளது..!

English summary
Is BJP targeting MK Stalin with Karate Thiyagarajan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X