லாபி.. பிளான் போட்ட 'சூத்திரதாரி'.. எடப்பாடிக்கு தான் சிக்கல்.. ஓபிஎஸ் டீம் சொல்லும் பரபர கணக்கு!
சென்னை : எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டதும் தவறு, அனுப்பிய முகவரியும் தவறு, இந்தக் கடிதம் உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்புக்குத்தான் சிக்கலாக அமையும் எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி. அடுத்தடுத்த 3 சம்பவங்கள் மூலம், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், இதனால் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவே இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் புகழேந்தி.
இந்திய சட்ட ஆணையம் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே ஈபிஎஸ்ஸுக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.

ஈபிஎஸ்ஸுக்கு அங்கீகாரம்?
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கை ஏற்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது. இதனால், அவரை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.

டெல்லியில் ஈபிஎஸ் பலம்
அதற்கு முன்னதாக, ஜி20 மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுப்பிய அழைப்புக் கடிதத்திலும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தற்போது மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளது.

ஈபிஎஸ் டீம் உற்சாகம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுகவின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணைய தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு, கட்சியின் கருத்தை தெரிவிக்கும்படி, கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுகவுக்கு யார் தலைமை பொறுப்பு வகிப்பது என ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என ஏற்று கடிதம் அனுப்பியுள்ளது, மத்திய பாஜக அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உள்ளது என்பதையே காட்டுவதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று மத்திய சட்ட ஆணையம் குறிப்பிட்டதால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் அந்த கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் கட்சி இயங்குகிறது.கட்சி விதிகளுக்கு எதிராக ஈபிஎஸ் செயல்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது, இதுபோன்ற சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பது தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வழிவகுக்கும் என அந்தக் கடிதத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து 3 மேட்டர்கள்
ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து 3 நிகழ்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நடைபெற்றுள்ளன. ஜி20 மாநாட்டுக்கு மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். அப்போதே ஓபிஎஸ் கொந்தளித்து கடிதம் எழுதினார். சமீபத்தில் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் சமர்ப்பித்த வரவு செலவு கணக்கை ஏற்று அந்த கடிதத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சட்ட ஆணையம், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

டெல்லி லாபி
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான தம்பிதுரை டெல்லியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, அரசின் துறைகளில் லாபி செய்து எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான மூவ்களை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. டெல்லி தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கூறி வரும் நிலையில், டெல்லியை வைத்தே எடப்பாடிக்கு சாதகமான நகர்வுகளை தம்பிதுரை முன்னெடுத்து வருகிறார். அதிமுக பிரச்சனை பற்றி அறிந்திராத துறைகளில் எல்லாம், எடப்பாடியை முன்னிறுத்தி வருகிறார் தம்பிதுரை என்கிறார்கள்.

தவறுதலாக கடிதம்
இந்நிலையில், சட்ட ஆணையம், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதம் பற்றிப் பேசியுள்ள ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றுதான் தேர்தல் ஆணைய குறிப்புகளில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இப்படியான சூழலில் தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாக கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அட்ரஸ் தவறு
மேலும், அதிமுக தலைமைக் கழகத்தின் முகவரியும் தவறாக உள்ளது. 226 , அவ்வை சண்முகம் சாலை என்பதுதான் உண்மையான முகவரி. ஆனால், 275 என போட்டிருக்கிறார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டிருக்கிறார்கள். லாபியை வைத்து ஏதாவது செய்யலாம். ஆனால், இதுவே உச்ச நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக முடிந்து விடும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி இப்படி கடிதம் எழுதலாம் என ஈபிஎஸ் மற்றும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்கும். அது எங்களுக்கு சாதகமாக அமையும் எனக் கூறியுள்ளார்.

பொதுச் செயலாளரா?
எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்கிறார். அதுவே செல்லாது என்று கூறி வருகிறோம். ஆனால், இப்போது பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆகவே இந்த கடிதம் முழுவதுமாக தவறான ஒன்று. வேண்டுமென்றே திட்டமிட்டு 'லாபி'யை பயன்படுத்தி மூவ் செய்திருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் புகழேந்தி.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications