2 விஷயங்கள்.. கொளுத்தி போட்ட அண்ணாமலை.. கெடு வைத்த செந்தில் பாலாஜி.. கொழுந்து விட்டெரியும் "கொங்கு"
செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்
சென்னை: சட்ட வழக்குகள் ஒருபக்கம் நெருக்கி தள்ள, அண்ணாமலை மறுபக்கம் லிஸ்ட் போட்டு புகார் சொல்ல, இப்படி 2 விதமான பரபரப்புகள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சுற்றி எழுந்துள்ளது.
கடந்த 2011 -16ல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் தற்போது இருந்து வருகின்றன.

மனு தாக்கல்
மேலும், அமலாக்கப் பிரிவும் இது தொடர்பாக செந்தில்பாலாஜியை விசாரித்து வருகிறது... இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதார ஆவணங்களை வழங்க தமிழக போலீசாருக்கு உத்தரவிட கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அமைச்சர் பதவி?
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், ஏஏ நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது... இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, போலீஸ் தரப்பில் உள்ள அனைத்து ஆதாரங்களும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களைப் பெற அங்குதான் அணுக வேண்டும் என்று வாதிட்டார்... இந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

செந்தில் பாலாஜி விவகாரம்
என்றாலும், இது தொடர்பான தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பதைபதைப்பு செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து வருகிறது.. இதனால் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற கலக்கமும் உள்ளுக்குள் ஏற்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை மேலும் டென்ஷனை எகிற வைத்துள்ளார்.. கடந்த சில தினங்களாகவே அண்ணாமலைக்கும் - செந்தில் பாலாஜிக்கும் வார்த்தை போர்கள் நடந்து வருகின்றன.. மாறி மாறி பொதுவெளியில் விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்.

அண்ணமலை குற்றச்சாட்டு
ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மறுபடியும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அண்ணாமலை கொளுத்திபோட, இந்த ஒப்பந்தம் அதிமுக ஆட்சியில் கடந்த 2019இல் போடப்பட்டது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலுக்கு செந்தில் பாலாஜி கெடு வைக்க, இப்படி அரசியல் களம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி கேள்வி
அண்ணாமலை நேற்று பேசும்போது பிஜிஆர் நிறுவன திட்டம் தொடர்பாக விளக்கம் தந்துள்ளார்.. அதில், "மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி பிஜிஆர் நிறுவன பிரதிநிதியாக பேசி வருகிறார்... திமுக தலைமையிலான அரசு திட்டம் போட்டு பிஜிஆர் நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட்டை தந்துள்ளது.. ஆக, வேறு நிறுவனத்துக்கு இந்த திட்டம் போய்விடக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக உள்ளார். கோபாலபுரம் குடும்பம் சம்பந்தப்பட்ட காரணத்தால் ஒப்பந்தம் BGR நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
தொடர்ந்து நஷ்டம் அடைந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழல் எப்படி செய்ய முடியும் என்று தமிழகத்துக்கு செந்தில் பாலாஜி கிளாஸ் எடுக்கிறார்... இந்த ஒப்பந்தம் திமுகவின் ஊழலின் ஆரம்பமாக அமைந்துள்ளது. ஒரு குடும்பம் கையை காட்டும் நபர்களுக்கே திமுக ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது.. செந்தில் பாலாஜி எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது... அதிமுக ஆட்சி காலத்தில் எண்ணூர் திட்டம் லன்கோ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்தவில்லை.. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் பெல் & பிஜிஆர் சென்டருக்கு விண்ணப்பம் செய்தது.

எச்சரிக்கை
ஊழலை பாஜக மட்டுமே தட்டி கேட்கிறது.. செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப போகிறேன்.. செபிக்கும் புகார் அனுப்ப உள்ளேன்... ஊழல் அதிகரித்தால் ஜனநாயகம் இறந்து போகும் என்பதால், ஊழல் குறித்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனக்கு கெடு வைக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பிரம்மனா?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு செந்தில் பாலாஜி என்ன பதிலடி தரப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications