சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை திருப்பூர், ஈரோடு சேலம் மாவட்டங்களில் ஆக்சிஜன் பெட் கிடைக்கிறதா.. நிலவரம் என்ன

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல்வறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால், சிகிச்சைக்கு அளிக்க போதிய பெட் வசதிகள் ஏற்படுத்துவது அரசுக்கு சவாலாக உள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் பெட் வசதி என்பது மிகவும் கடினமாக உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருந்து சிகிச்சை பெறும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது-

சென்னைக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து வரும் கோவையில் நிலைமை கவலை தரும் வகையில் உள்ளது. கோவை திருப்பூர், ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ஆக்சிஜன் பெட் வசதி கிடைப்பது மிகவும் கடினமான நிலையே உள்ளது. ஈரோட்டில் மட்டும் ஓரளவு பரவாயில்லை.

 ஃபுல் ஸ்பீடில் தமிழக அரசு.. 'பெட்' இருப்பு அறிய.. 'நியூ' ட்விட்டர் அக்கவுண்ட் ஃபுல் ஸ்பீடில் தமிழக அரசு.. 'பெட்' இருப்பு அறிய.. 'நியூ' ட்விட்டர் அக்கவுண்ட்

எவ்வளவு பெட்

எவ்வளவு பெட்

https://stopcorona.tn.gov.in/beds.php என்ற இணையதளத்தில் தமிழகஅரசு, தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பெட் வசதி காலியாக உள்ளது. எங்கெல்லாம் ஆக்சிஜன் பெட் வசதி தற்போது இருப்பில் உள்ளது, எங்கெல்லாம் ஐசியு பெட் வசதிகள் உள்ளது என்ற தகவலை பகிர்ந்து வருகிறது.

என்ன நிலவரம்

என்ன நிலவரம்

அந்த பட்டியலின் கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை எப்படி உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்(குறிப்பு சில மாவட்டங்களில் உள்ள மருத்துவனைகளில் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது, கடைசி நேர நிலவரத்தை மருத்துவமனைக்கு அழைத்து தெரிந்து கொள்வது நல்லது). கோவை மாவட்டத்தில் இந்த பட்டியலில் அரசு மருத்துவமனைகளை தவிர தனியார் மருத்துவமனைகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.

ஈரோட்டில் அதிகம்

ஈரோட்டில் அதிகம்

கோவையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2000 ஆக்சிஜன் பெட் படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் காந்திபுரத்தில் உள்ள சென்னை மருத்துவமனையில் மட்டும் 37 இடங்கள் உள்ளன. மற்ற எதிலும் ஒன்று கூட தற்போது காலியாக இல்லை. ஈரோட்டில் சுமார் 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிக்சை அளிக்கப்படுகிறது. . இவற்றில் சுமார் 220 ஆக்சிஜன் பெட் படுக்கை வசதிகள் உள்ளன, இவற்றில் Maaruthi Medical Centre And Hospital மட்டும் 4 இடங்கள் இன்றைய நிலவரப்படி உள்ளது. இதேபோல் கோவை மெடிக்கல் சென்டரில் 20 படுக்கைகள் காலியாக உள்ளன.

திருப்பூர் நிலவரம்

திருப்பூர் நிலவரம்

சேலத்தில் சுமார் 35 மருத்துவமனைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் பெட் படுக்கை வசதிகள் உள்ளன இவற்றில் Vinayaka Mission Super Specialty Hospitals Pvt Ltd மருத்துவமனையில் மட்டுமே 2 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் மோகன்ராஜ் குழந்தைகள மருத்துவமனையில் 2 இடங்கள் காலிகயாக உள்ளது. ஆனால் பெரும்பாலன மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி சுத்தமாக இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 11 மருத்துவமனைகளில் ஒரே ஒரு இடம் (Malarpriya Hospital) மட்டுமே காலியாக உள்ளது.

English summary
The situation in Coimbatore, which is next to Chennai, is worrisome. Oxygen bed facility is also very difficult in Coimbatore, Tiruppur, Erode and Salem districts. Erode alone is somewhat okay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X