சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிம்பு அழுகை..! மாநாடு ரிலீஸ் சிக்கல்! உதயநிதியை கை காட்டும் கோலிவுட்! பின்னணி என்ன?

By Staff
Google Oneindia Tamil News

திரையுலகில் பேட் பாயாக வலம் வந்த சிம்பு மனம் திருந்தி குட் பாயாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்று வரும் நிலையில் தேவையின்றி பெரிய இடத்துடன் மோதியதால் ஏற்பட்ட பலனை தற்போது அனுபவிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுகள் பலமாக அடிபடுகின்றன.

ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?

தள்ளிப்போன மாநாடு

தள்ளிப்போன மாநாடு

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. சிம்பு இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். முதல் லாக்டவுன் முடியும் தருவாயில் படம் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் அடுத்த லாக் டவுன் காரணமாகப் படத்தை வெளியிட முடியவில்லை. ஒரு வழியாக லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட போது 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதி என்பதால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காத்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அண்ணாத்தவுடன் மோத தயார்

அண்ணாத்தவுடன் மோத தயார்

இதனை அடுத்து மாநாடு திரைப்படத்தைத் தீபாவளிக்கு வெளியிட சுரேஷ் காமாட்சி தரப்பு தயாரானது. ஆனால் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானாலும் மாநாடு படம் கண்டிப்பாக வெளியாகும் என்றே சுரேஷ் காமாட்சி கூறி வந்தார். குறைந்த திரையரங்குகள் கிடைத்தாலும் கூட ரஜினி படத்துடன் மோதியே ஆக வேண்டும் என்று சுரேஷ் காமாட்சி தீவிரம் காட்டினார். இதன் பின்னணியில் சிம்பு இருந்ததாகச் சொல்கிறார்கள். ரஜினியுடன் மோத வேண்டும் என்பது சிம்புவின் நீண்ட நாள் ஆசையாம். அதிலும் மாநாடு போன்ற செம கன்டென்ட் உள்ள படத்துடன் களம் இறங்கினால் நிச்சயம் ரஜினி படத்தை காலி செய்துவிடலாம் என்று சிம்பு கணக்குப் போட்டதாகக் கூறுகிறார்கள்.

உள்ளே வந்த ரெட் ஜெயன்ட்

உள்ளே வந்த ரெட் ஜெயன்ட்

இதனிடையே அண்ணாத்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வாங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகும் கூட தீபாவளிக்கு மாநாடு வெளியாகும் என சுரேஷ் காமாட்சி கூறி வந்தது தான் பிரச்சனைக்குப் பிள்ளையார் சுழி என்கிறார்கள். அண்ணாத்த படத்தைத் தனியாக ரிலீஸ் செய்து கோடிகளை அள்ள வேண்டும் என்பது தான் திட்டமாக இருந்தது. இதற்கு மாநாடு இடையூறு செய்த காரணத்தினால் தான் வழக்கம் போல் அன்பானவன்.. அசராதவன்.. அடங்காதவன் திரைப்படப் பிரச்சனையை அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கிளப்பினார்.

சிம்பு லூஸ் டாக்

சிம்பு லூஸ் டாக்

இதனால் மாநாடு படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதனைச் சரி செய்து படத்தை ரிலீஸ் செய்ய சுரேஷ் காமாட்சி தயாரான நிலையில் தான் ரெட் ஜெயன்டை மீறி திரையரங்குகள் கொடுக்க யாரும் முன்வராததால் திடீரென பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார். ஆனால் தனது நண்பர்கள் சர்க்கிளில் சிம்பு லூஸ் டாக் விட்டதாகக் கூறுகிறார்கள். சூப்பர் ஸ்டார் படமே தன் படத்தைப் பார்த்துப் பயப்படுவதாகவும், யார் ரிலீஸ் செய்தால் என்ன மாநாடு வெளியான பிறகு பாருங்கள் என்கிற ரீதியில் சிம்பு உதயநிதியையும் சீண்டியதாகச் சொல்கிறார்கள். இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

பிரச்சனை ஆரம்பமானது எங்கே?

பிரச்சனை ஆரம்பமானது எங்கே?

இந்த தேர்தலில் விஷால் - சரத்குமார் இடையே மோதல் இருந்தது. இந்த மோதலில் விஷாலை உதயநிதி ஆதரித்தார். ஆனால் சிம்பு சரத்குமாரை ஆதரித்தார். அப்போதும் கூட சிம்பு சில விஷயங்களைத் தேவையின்றி பேசியதாகக் கூறுகிறார்கள். இப்படி சிம்பு தேவையற்ற விஷயங்களைப் பேசியது தான் மாநாடு படத்திற்கு தற்போது எழுந்துள்ள பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது இனி திரையரங்குகளுக்கு வருபவர்கள் கோவிட் தடுப்பூசி சான்றிதழுடன் வர வேண்டும் என்கிற நிபந்தனையைத் தமிழக அரசு திடீரென விதித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

சிம்பு படம் வெளியாக ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தமிழக அரசு இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது மாநாடு படத்தின் வசூலைப் பாதிக்கும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருதுகிறார். மேலும் தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்பதைக் காரணம் காட்டி ரசிகர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்காத சூழல் நிலவுவதால் என்றும் மீறி அனுமதிக்கும் திரையரங்குகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள்.இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மாநாடு படத்தின் ரிலீசின் போது, உள்ளே வரும் ரசிகர்களிடம் கெடுபிடி காட்டலாம் என்றும் கூறுகிறார்கள்

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க

உலகத்தில் வேறு எங்குமே இல்லாத இப்படி நிபந்தனையைத் தமிழகத்தில் மட்டும் விதிப்பது ஏன்? அதுவும் சிம்பு படம் வெளியாகும் போது மட்டும் இப்படி ஒரு நிபந்தனைக்குக் காரணம் என்ன என்று சிம்பு தரப்பில் இருந்து கேள்வி கேட்கிறார்கள். இதற்கு மோதக்கூடாத இடத்தில் மோதினால் இப்படித்தான் நடக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த மூத்த புள்ளிகள். ரஜினி, அஜித், விஜய் போன்றோரே தங்கள் படம் வெளியாகப் பக்குவமாகச் செல்லும் நிலையில், சிம்பு, சுரேஷ் காமாட்சி போன்றோர் சமூக வலைத்தளங்களில் காட்டிய கெத்து தான் உதயநிதி தரப்பைச் சீண்டியுள்ளதாகக் கூறுகிறார்கள்.

Recommended Video

    பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease
    உதயநிதியை கைகாட்டும் கோடம்பாக்கம்

    உதயநிதியை கைகாட்டும் கோடம்பாக்கம்

    சிம்பு விவகாரத்தில் உதயநிதி கோபமாக உள்ளதால் மாநாடு படத்தோடு இந்த சிக்கல் முடியக் காரணம் இல்லை என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. சூர்யாவுக்கு ஒரு பிரச்சனை என்றதும் கொதியாய் கொதித்தவர்கள் சிம்புவுக்கு இப்படி மறைமுக பிரச்சனை கொடுக்கும் போது அமைதி காப்பதற்கும் காரணம் சிம்பு மோதியது பெரிய இடத்துடன் என்பதைத் தெரிந்து கொண்டு தான் என்றும் கூறுகிறார்கள். அதிலும் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சிம்பு கண்ணீர் விட்டதற்கான காரணம் இதுவரை இந்த அளவிற்குப் பிரச்சனையை அவர் எதிர்கொண்டதில்லை என்பதற்குத்தானாம்.

    English summary
    Simbu's Maanadu releases the latest news. Simbu vs Udhayanidhi kollywoods latest talks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X