விட்ருங்க.. "கன்ட்ரோல்" பண்ண முடியாது.. ரிஸ்க் எடுக்காத ஸ்டாலின்! உதயநிதிக்கும் ஓகே! திடீர் ட்விஸ்ட்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி இப்போதைக்கு வேண்டாம் என்கிறார்களாம்
சென்னை: உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவியை ஏற்க போகிறார் என்று நாள் குறித்து, கட்சியினரே ஆவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அந்த பதவி இப்போது அவருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்பட்டதில் இருந்தே அமைச்சரவை மாற்றம் என்ற விவகாரம் தலைதூக்கியது.. உதயநிதி அமைச்சராவார், துணை முதல்வர் ஆவார் என்று இருவேறு தகவல்கள் வட்டமடித்து கொண்டே இருக்கின்றன.
இதை செய்தியாளர்கள் உதயநிதியிடமே அன்று கேட்டனர்.. "நீங்கள் அமைச்சராக, அல்லது துணை முதல்வராக வரவேண்டும் என்று, உங்கள் அமைச்சர்களே விரும்புகிறார்களே.. இது முதல்வரின் கவனத்திற்கு சென்றதா? என்று கேட்டனர்.. அதற்கு உதயநிதி சிரித்து சமாளித்தாரே தவிர, கறார் பதில் எதையும் சொல்லவில்லை.

திடீர் சிக்கல்
கடந்த மே 7ம் தேதியன்று அமைச்சரவை மாற்றம் நடப்பதாக இருந்தது.. அதுவும் நடக்காமல் தள்ளி போய்க் கொண்டிருக்கிறது.. இதற்கு உதயநிதியைதான் காரணமாக சொன்னார்கள்.. உதயநிதியை அமைச்சர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே துர்கா ஸ்டாலினுக்கு விருப்பம் இருந்தாலும், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் இன்னும் பலமாக எழுந்துவிடுமே என்பதால் ஸ்டாலின் ரொம்பவே யோசிப்பதாகவும், அதனாலேயே அமைச்சரவை மாற்றம் தள்ளி போய் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

அமைச்சர் நேரு
இது ஒரு புறமிருக்க, உதயநிதியை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் அவருக்கு மிகப் பெரிய சுமையாக இல்லாத துறையின் அமைச்சராக்கி விட்டு, ஒரு வருடம் அனுபவம் பெற்றப்பிறகு உள்ளாட்சி துறை போன்ற பெரிய இலாகாவைத் தரலாம் என்பது ஸ்டாலினின் முடிவாக இருப்பதாக கூறப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஊரக உள்ளாட்சியையும், நகர்ப்புற உள்ளாட்சியையும் இணைத்து உள்ளாட்சி துறை அமைச்சராக்க வேண்டும் என திமுகவில் ஒரு தரப்பு வலியுறுத்தி வந்தாலும், அதை ஏற்க ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.. இதை நாம் ஏற்கனவே ஒன்இந்தியாவிலும் பதிவு செய்திருந்தோம்.

அன்பில் மகேஷ்
இந்நிலையில், உதயநிதியின் பதவி குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. சமீபத்தில் அமைச்சரவையில் உதயநிதியை சேர்க்க வலியுறுத்தி அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் அதேபோல தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர். ஆனால், அதனை தடுக்கும் வகையில், "என்னை அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம். எந்த சூழலில் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று கழகத்திற்கும் தலைமைக்கும் தெரியும்" என்று அறிக்கை வாசித்தார் உதயநிதி..

சிக்கல்கள்
இதனால், தீர்மானம் நிறைவேற்றவிருந்த மற்ற அமைச்சர்கள் தங்களின் திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். அன்பில் மகேஷ், இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணியாக சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளது அறிவாலயம் தரப்பு. அவர்கள் நம்மிடம் சொல்லும்போது, இப்போதைக்கு அமைச்சராக வேண்டும் என்கிற எண்ணம் உதயநிதிக்கே கிடையாது. அமைச்சர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு... 24 மணி நேரமும் சீரியசாகவே இருக்க வேண்டியது வரும்.

கன்ட்ரோல் கஷ்டம்
தன்னுடைய துறையில் ஊழல்கள் நடக்கக் கூடாது என்று உதயநிதி மிக ஸ்ட்ரிக்டாக இருக்கலாம்... ஆனால், ஒரு கட்டத்தில் அதனை, அவராலேயே கட்டுப்படுத்த முடியாமலும் போகும்... அப்போது அவரது இமேஜ் கண்டிப்பாக பாதிக்கும்... அதனால் அப்படிப்பட்ட நிலையை உதயநிதி விரும்பவில்லை. இன்னும் சில பல மாதங்கள் போகட்டும், அப்புறம் பார்க்கலாம் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. ஆனால், அவரது நலம் விரும்பிகளோ, உதய்யின் எண்ணத்தை உடைத்து வருகிறார்கள்... இந்த நிலையில், அமைச்சரவையில் இணையும் அளவுக்கு உதய்க்கு பக்குவம் வரவில்லை.

பூத கண்ணாடி
ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே மகனை அமைச்சராக்கி விட்டார் என்கிற விமர்சனமும் ஸ்டாலினுக்கு வரும்... எதிர்க்கட்சிகள் , உதய்யின் அமைச்சரவை நடவடிக்கைகளையும், அவர் சார்ந்த துறையில் நடக்கும் தவறுகளையும் பூத கண்ணாடி வைத்து பார்ப்பார்கள்... உதய்க்கு எதிராகவும் அரசியல் செய்வார்கள். இதற்கெல்லாம் உடனடியாக உதய் ரியாக்ஷன் காட்டியாக வேண்டும். அதற்கேற்ப இன்னும் உதய் பக்குவம் பெறவில்லை என்று ஸ்டாலினிடம் ஒரு குரூப் சொல்லி வருகிறது. ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே மகனை அமைச்சராக்கி விட்டார் என்கிற விமர்சனமும் ஸ்டாலினுக்கு வரும்... எதிர்க்கட்சிகள் , உதய்யின் அமைச்சரவை நடவடிக்கைகளையும், அவர் சார்ந்த துறையில் நடக்கும் தவறுகளையும் பூத கண்ணாடி வைத்து பார்ப்பார்கள்... உதய்க்கு எதிராகவும் அரசியல் செய்வார்கள். இதற்கெல்லாம் உடனடியாக உதய் ரியாக்ஷன் காட்டியாக வேண்டும். அதற்கேற்ப இன்னும் உதய் பக்குவம் பெறவில்லை என்று ஸ்டாலினிடம் ஒரு குரூப் சொல்லி வருகிறது.

திடீர் குழப்பம்
இதனையெல்லாம் அறிந்து தான் அன்பில் மகேஷ், தீர்மானம் நிறைவேற்றினால் மற்ற அமைச்சர்களும் அதே பாணியை பின்பற்றுவார்கள். உதய் அமைச்சராக்கப்படுவார் என்று திட்டமிட்டே அதனை செய்தார். இப்படி தீர்மானம் நிறைவேற்றியதை ஸ்டாலின் ரசிக்கவில்லை. அதனால் தான், எனக்கு அமைச்சர் பதவி கேட்டு தலைமைக்கு தர்மசங்கடம் உருவாக்காதீர்கள் என்று உதய் அறிக்கை வாசித்தார்'' என்கிறது அறிவாலயம் தரப்பு.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட்












Click it and Unblock the Notifications