Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நிறம்" மாறும் தலைகள்.. நொறுங்கும் சசியின் கனவு.. எகிறும் எடப்பாடியின் மவுசு.. காலம் தந்த பரிசு

சசிகலா விஷயத்தில் மெத்தனம் காணப்படுவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்தையுமே தீர்மானிக்க கூடியது காலம்தான் என்றாலும், அத்தகைய காலத்தையே மிஸ் செய்துவிடுவது ஆகச்சிறந்த பலவீனமாக அமைந்துவிடுகிறது.. இது அரசியல் உட்பட அனைத்து விஷயங்களுக்குமே பொருந்தும் உண்மை..!

சட்டசபை தேர்தல் முடியும் வரை சத்தமில்லாமல் இருந்த சசிகலா, திடீரென அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பினார்.. அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசியதாக ஆடியோக்கள் வெளியானது.

முதலில் தொண்டர்களிடம்தான் சசிகலா ஆடியோவில் பேசி வருகிறார் என்று சொல்லப்பட்டது.. பிறகு ஆதரவாளர்களிடம் பேசுகிறார் என்றார்கள்.... பிறகு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடமே சசிகலா போனில் பேசியதாக கூறப்பட்டது.

வலிமை

வலிமை

சசிகலா இப்படி ஆடியோவில் பேச பேச, மற்றொருபக்கம் சசிகலாவை ஆதரித்து வெளியிட்ட தீர்மானங்களால் எடப்பாடி சற்று நிலைகுலைந்து போனார் என்பதை மறுப்பதற்கில்லை.. அதேசமயம், 30 வருடம் ஜெயலலிதாவிடம் லாபி செய்தவரான சசிகலாவின் வருகையை அவரால் ஒரேடியாக குறைத்துவிடவும் முடியவில்லை...

சீரியஸ்

சீரியஸ்

ஆடியோ வெளியிட்டதுடன் வீடியோவும் வெளியிட போவதாக சசிகலா தரப்பில் கூறப்பட்ட நிலையில், அது என்னவாயிற்று என்று தெரியவில்லை.. ஆடியோவும் காணோம்.. வீடியோவும் வரவில்லை.. சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார் சசிகலா. ஆக மொத்தம், கட்சி ஆபத்தான நிலைக்கு சென்றும்கூட, அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துகூட, அதிரடிக்குள் இறங்காமல், மேலோட்டமாகவே அரசியல் செய்து வருகிறார் சசிகலா.. இதுதான் தற்போது சீரியஸாகிவிட்டது.

 திமுக வலிமை

திமுக வலிமை

திமுகவின் அரசியலை எதிர்க்க வேண்டுமாயின் அதிமுக வலிமையாக வேண்டும், அதிமுக வலிமையாக வேண்டுமாயின் கட்சி ஒன்றாக வேண்டும் என்கிற மனநிலை அதிமுகவின் அடி முதல் மேல் மட்ட நிர்வாகிகள் வரை சமீபகாலமாக பரவி வந்தது என்னவோ உண்மைதான்.. அதிமுக மாஜி மந்திரிகள் , சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் என பலரிடமும் இதே கருத்து நிலவியதும் மறுக்க முடியாதுதான்.. ஆனால், சமீபகாலமாக அதிலிருந்து விலகி நிற்கிறார்கள் சீனியர்கள். இதுதான் தற்போதைய ஹாட் நியூஸாகி வருகிறது.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

இதுகுறித்து அவர்களிடம் நாம் பேசிய போது, "எடப்பாடி உள்ளிட்ட சிலரைத் தவிர பெரும்பாலான சீனியர்கள் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வரலாம் என்றே கருத்து தெரிவித்தோம். இதனை சசிகலாவுக்கும் தெரியப்படுத்தினோம். ஆனால், அவரோ, கட்சிக்குள் வருவதற்கான எந்த முன்முயற்சியையும் எடுக்கவில்லை. அவரை பொறுத்த வரை , எடப்பாடி உள்பட கட்சியின் அனைத்து தலைவர்களும் தன்னை தேடி வந்து, "அம்மா எங்களால் கட்சியை நடத்த முடியவில்லை ; நீங்கள்தான் தலைமையேற்று நடத்த வேண்டும்" என்று கெஞ்ச வேண்டும் என நினைக்கிறார்.

 நடக்கிற காரியமா?

நடக்கிற காரியமா?

இதெல்லாம் நடக்கிற காரியமா? கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. அதிமுக அழிந்து விடக்கூடாது என்று கருதினால் சசிகலாதான் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தொடங்கி எல்லா தலைவர்களிடமும் பேச வேண்டும். அதை விடுத்து கார்டனில் இருந்து அதிகாரம் செலுத்திய அந்த கால நினைவுகளிலேயே இருந்தால் போதுமா? அந்த மனநிலையில் இருந்து அவர் முதலில் விடுபட வேண்டும். அதற்கு அவர் தயாராக இல்லை என தெரிவதால்தான் சசிகலாவின் ஆதரவு மனநிலையில் இருந்து நாங்களெல்லாம் விலகி நிற்கிறோம்" என்று நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.

ரிவர்ஸ் கியர்

ரிவர்ஸ் கியர்

அப்படியானால் சசிகலா விஷயம் புஸ்ஸென்று போய்விட்டதா? அளவுக்கு மீறிய பொறுமை, அப்படியே தலைகீழ் மாற்றத்தை தந்து வருகிறதா என்று தெரியவில்லை.. ஆனால், 30 வருஷம் ஜெ.விடம் லாபி செய்த சசிகலாவுக்கு, எடப்பாடி பழனிசாமியையும், ஓபிஎஸ்ஸையும் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. அதிமுக என்ற ஆலமரம் கலையக்கூடாது என்ற ஒரு விஷயத்துக்காக, பல விஷயங்களில் பொறுமை காக்கிறார் என்றாலும், சசிகலா இந்த அளவுக்கு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயம்தான் என்றாலும், எதிலும் ஒரு லிமிட் உள்ளது, சசிகலா விவகாரம் இல்லாமல் இருந்தாலே, அதிமுகவுக்குள் பெரிய அளவுக்கு பிளவு வந்திருக்காது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது..

சசிகலா

சசிகலா

அதேசமயம், அதிமுக தலைவர்களுக்குள் தற்போது நல்ல இணக்கமான போக்கு ஏற்பட்டுள்ளது.. இதற்கும் காரணம் சசிகலாதான்.. காரணம், யாரையுமே ஒரு அளவுக்கு மேல் சீண்டினால், அவர்கள் முன்பிருந்த இயல்பை விட அசுர பலம் பெற்றுவிடுவார்கள்.. அந்த பலமே எதிர்தரப்பை காலி செய்துவிடும்.. இதுதான் இயற்கை.. இதில் வி.கே.சசிகலாவும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் இங்கு சொல்ல வேண்டி உள்ளது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+