Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மட்டன் லவ்வர்ஸ் உஷார்.. ஆட்டின் இந்த பாகத்தை மட்டும் தெரியாம கூட வாங்கி சாப்பிடாதீங்க! வெளியான பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடல் உணவு ஆரோக்கியம்தான்.. ஆட்டுக்கறி, கோழிக்கறி, நாட்டுக்கோழியும் ஆரோக்கியம்தான்.. சொல்லப்போனால் நாம் அன்றாடம் "ஆரோக்கியமானது" என்று நினைத்து சாப்பிடும் பல உணவுகளில் கூட மறைமுகமான ஆபத்துகள் ஒளிந்திருக்கிறதாம்.. அந்தவகையில், அசைவ உணவுகளில் மட்டனை விடவும் அதிக ஆபத்து நிறைந்ததாக பிராய்லர் கோழிகள் (Broiler Chicken) உள்ளன.. இதை பற்றி இங்கே பார்ப்போம்.

மட்டன் சத்துக்கள் நிறைந்த உணவாக கருதப்படுகிறது; இதில் உயர் தரமான புரோட்டீன் அதிகமாக இருப்பதால் தசைகள் வலுவாக வளர உதவுகிறது, இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்தச்சோகை தடுப்பதிலும் ஹீமோகுளோபின் அதிகரிப்பதிலும் உதவுகிறது.

மேலும் வைட்டமின் B12 நரம்பு மண்டலம் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது, ஜிங்க் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன, நல்ல கொழுப்பு மற்றும் சக்தி அளிப்பதால் உடல் பலம் மற்றும் சக்தியை உயர்த்தும் தன்மையும் மட்டனுக்கு உள்ளது.

Mutton Lovers

மட்டனில் இந்த பாகம் கவனம்

மட்டனில் கொழுப்பு அதிகம் உள்ளதால், இதய நோயாளிகள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக யூரிகாசிட் பிரச்சினைகள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மட்டன் சாப்பிடுவது வலியை அதிகரிக்கலாம் என்பதால் மருத்துவர்களின் அறிவுரையை பெறுவது அவசியம்.

அதிக காய்ச்சல், ஃபைல்ஸ், பல்வலி, சளி உள்ளவர்கள் மட்டன் தவிர்க்க வேண்டும்.. உடல் சூடு அதிகரிக்கும் என்பதால் இவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் நோயுள்ளவர்கள் மட்டன் சாப்பிடக் கூடாது.. மட்டனில் உள்ள அதிக புரோட்டீன் கல்லீரலுக்கு அழுத்தம் தரும்..

வாரத்தில் 2-3 முறை அதிகமாக சாப்பிட்டால் டைப்-2 சர்க்கரை அபாயம் கூடும், குழந்தைகளும் அளவாகவே சாப்பிட வேண்டும்.. உடல் கொழுப்புக்கு இறைச்சி அவசியம் என்றாலும் அளவுக்கு மேல் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு என்கிறார்கள் நிபுணர்கள்,

கோழிக்கறி பாகம்

அதேபோல கோழிகள் விரைவாக வளர்வதற்காக போடப்படும் ஹார்மோன் ஊசிகளும், அவை நோய்வாய்ப்படாமல் இருக்கக் கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் மனித உடலில் கடுமையான ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.. குறிப்பாக சிறுமிகள் மிக இளம் வயதிலேயே பருவமடைவதற்கும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும் இது ஒரு முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறது..

கோழி இறைச்சி சத்தானது என்றாலும், சில பாகங்களை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்; குறிப்பாக தோல், கழுத்து, குடல், தலை, கால்கள் போன்ற இடங்களில் கொழுப்பு, கிருமிகள் மற்றும் நச்சுப் பொருட்கள் அதிகமாக இருக்கலாம் என்பதால் அவை உடல் நலத்திற்கு பாதிப்பு தரக்கூடும்

கோழியின் குடல் பகுதியில் செரிமானக் கழிவுகள் மற்றும் நோய் கிருமிகள் அதிகமாக இருக்கும்.. முறையாக சுத்தம் செய்யாதால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மனித உடலுக்குள் சென்றால் தீங்கு விளைவிக்கும்.. சுத்தம் செய்தாலும் இந்த கிருமிகளை முழுவதுமாக நீக்குவது கடினம்.. அதனால் கோழியின் குடல் பகுதியை சாப்பிடாமல் தவிர்ப்பது பாதுகாப்பானது..

கில்லர் கெளுத்தி டேஞ்சர்

அடுத்ததாக, நாம் மிகவும் பாதுகாப்பானது என்று கருதும் மீன் உணவுகளிலும் இப்போது ஆபத்து புகுந்துவிட்டது.. கடல் மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக ஃபார்மலின் என்ற கெமிக்கல் தடவப்படுகிறது.. இது பிணங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும்.. இந்த ரசாயனம் கலந்த மீன்களைச் சாப்பிடும்போது கிட்னி, கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது..

கில்லர் கெளுத்தி (Pufferfish) மீன் மிகவும் விஷமுடையது. காரணம் இதிலுள்ள டெட்ரோடோடாக்சின் (Tetrodotoxin) மனிதர்களின் நரம்பு செயல்களை முடக்கக்கூடிய ஆபத்தான நச்சு என்பதால், சிறிதளவு கூட உடலில் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். பஃகா மீன் (Puffer Fish), முரல் (Moray Eel) மற்றும் சில பாறை மீன்கள் (Reef Fish) நச்சுத்தன்மை கொண்டவை என்கிறார்கள். பனங்கொட்டை (Climbing perch) அல்லது சிகப்பு ஸ்னாப்பர் (Red snapper) போன்ற மீன்களுடன் கலப்பதால் நச்சுத்தன்மை பரவும் வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.

சைவ உணவுகளை எடுத்துக் கொண்டால், பால் மற்றும் பால் பொருட்கள் மிகப்பெரிய விவாதப் பொருளாக உள்ளது.. பாக்கெட் பாலில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் மாடுகளுக்குப் போடப்படும் ஆக்சிடோசின் ஊசிகள் பாலில் கலந்து வருகின்றன.. இது குழந்தைகளுக்குப் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை உண்டாக்குகிறது..

ரசாயனம், மைதா, ஜீரண மண்டலம்

அதேபோல், தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பரோட்டா (Parotta) மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள் குடலில் ஒட்டிக்கொண்டு ஜீரண மண்டலத்தையே சீர்குலைக்கின்றன.. மைதாவை வெண்மையாக்கச் சேர்க்கப்படும் அலெக்சான் என்ற கெமிக்கல், கணையத்தைப் பாதித்துச் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறதாம்.

ஃபாஸ்ட் ஃபுட், கூல் டிரிங்க்ஸில் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ, அதிகப்படியான சர்க்கரை, மெதுவான விஷமாக உடலில் வேலை செய்கிறது..

அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உணவுகளில் சேர்க்கப்படும் கெமிக்கல் பொருட்கள் கலந்த, தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகள் இதய ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாக்குகின்றன.. எனவே எந்த உணவை எடுத்து கொண்டாலும், அதில் இயற்கையாக அல்லது செயற்கையாக விஷத்தன்மை உள்ளதா என்பதை கண்டறிந்து சாப்பிடுவதே உண்மையான ஆரோக்கியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+