சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்தை ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை சட்டப்படி உரிமையோடு கைப்பற்றிய தீபா, தீபக்

பாட்டி சந்தியாவின் சொத்துக்களை தீபாவும், தீபக்கும் சட்டப்படி உரிமையோடு சொந்தமாக்கிக்கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை தீபாவும், தீபக்கும் சட்டப்படி வழக்குத் தொடர்ந்து உரிமையோடு சொந்தமாக்கியுள்ளனர். பாட்டி வாங்கிய வீடு பேரப்பிள்ளைகளுக்கே என்று நிரூபித்துள்ளனர். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா இடத்தை வாங்கியது முதல் வேதா இல்லம் கட்டப்பட்டு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசுடமையாக்கப்பட்டது. அது செல்லாது என சட்டப்போராட்டம் நடத்தி தீபாவும் தீபக்கும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவியாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்தவரைக்கும் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. ஜெயலலிதா தமிழக அரசியலுக்க அறிமுகமான காலம் முதல் பிரபலமானது அவருடைய போயஸ் கார்டன் வீடு.

வேதா நிலையத்தில் ஜெயலலிதா 44 ஆண்டுகள் இருந்தவரைக்கும் சினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து ராணியாகவே வாழ்ந்து மறைந்தார். வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.

ரூ.5,116 கோடியில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்! ரூ.5,116 கோடியில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

1967ல் இடம் வாங்கிய சந்தியா

1967ல் இடம் வாங்கிய சந்தியா

அரசு ஆவணங்களில் உள்ளபடி கடந்த 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தில் இந்த இடத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார். பாட்டியின் சொத்து பேரப்பிள்ளைகளுக்குத்தான் வேண்டும் என்ற உரிமையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் இதை தங்களுக்கான சொத்து என்று உரிமை கோரியுள்ளனர்.

வேதா இல்லம்

வேதா இல்லம்

24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்: 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், வேதாஇல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது. 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நிகழ்ந்துள்ளது. வீடு கட்டும்போது இருந்த சந்தியா, கட்டி முடித்த பின்னர் கிரகப்பிரவேசத்திற்கு உயிரோடு இல்லை. அதை சோகத்தோடு குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

அம்மா இல்லையே

அம்மா இல்லையே

இந்த மாளிகையை அணு அணுவாகச் செங்கல் செங்கல்லாகப் பார்த்துக் கட்டியவர் என் அன்னைதான். ஆனால் இந்த விழாவுக்கு அவர் இல்லையே. கண் குளிரப் பார்த்து உள்ளம் குளிர வாழ்த்திட அவர் இப்போது இல்லையே என்ற ஏக்கம், திரை விரிவது போல என் நெஞ்சில் விழுந்தது. வேதா நிலையத்தை கட்டி முடிக்கும் வரை என் தாய் தூங்கவில்லை. கட்டி முடிக்கப்பட்ட பின் புதுமனை புகு விழாவுக்கு அவர் இல்லை. ஆனால் அவரது வண்ண ஓவியம் தெய்வமாக வீட்டின் முகப்பிலிருந்து என்னைக் காத்து வருகிறது என்று கண்ணீருடன் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா.

மிரள வைக்கும் தோற்றம்

மிரள வைக்கும் தோற்றம்

போயஸ்கார்டன் சொத்தை 1967ல் வாங்கும் போது அதன் மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய். இந்த பங்களாவின் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடிகள். மொத்தம் இரண்டு ஃப்ளோர்கள். கீழே பெரிய ஹால்கள் அடங்கிய ஐந்து அல்லது ஆறு அறைகள். மேலே ஐந்து அறைகள் இருக்கின்றன என்கிறார்கள். போயஸ் கார்டனுக்குள் சென்றவர்களுக்கு அந்த மாளிகையின் பிரம்மாண்டம் தெரியும் மிகப்பெரிய நீச்சல் குளம், வாசலில் மிகப்பெரிய பலா மரம், அழகிய பூந்தோட்டம், 20க்கும் மேற்பட்ட அறைகள் அவற்றில் ஒவ்வொரு அறையிலும் ஏசி என வெளித் தோற்றமே காண்போரை மிரள வைக்கும். வீட்டின் பிரதான நுழைவுக் கதவே கோயில் கதவு போலத் தான் இருக்கும்.

அம்மா இல்லையே

அம்மா இல்லையே

இந்த மாளிகையை அணு அணுவாகச் செங்கல் செங்கல்லாகப் பார்த்துக் கட்டியவர் என் அன்னைதான். ஆனால் இந்த விழாவுக்கு அவர் இல்லையே. கண் குளிரப் பார்த்து உள்ளம் குளிர வாழ்த்திட அவர் இப்போது இல்லையே என்ற ஏக்கம், திரை விரிவது போல என் நெஞ்சில் விழுந்தது. வேதா நிலையத்தை கட்டி முடிக்கும் வரை என் தாய் தூங்கவில்லை. கட்டி முடிக்கப்பட்ட பின் புதுமனை புகு விழாவுக்கு அவர் இல்லை. ஆனால் அவரது வண்ண ஓவியம் தெய்வமாக வீட்டின் முகப்பிலிருந்து என்னைக் காத்து வருகிறது என்று கண்ணீருடன் எழுதியிருக்கிறார் ஜெயலலிதா.

Recommended Video

    #BREAKING ஜெ. வேதா இல்லம்: அரசுடமை செல்லாது!
    மிரள வைக்கும் தோற்றம்

    மிரள வைக்கும் தோற்றம்

    போயஸ்கார்டன் சொத்தை 1967ல் வாங்கும் போது அதன் மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய். இந்த பங்களாவின் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடிகள். மொத்தம் இரண்டு ஃப்ளோர்கள். கீழே பெரிய ஹால்கள் அடங்கிய ஐந்து அல்லது ஆறு அறைகள். மேலே ஐந்து அறைகள் இருக்கின்றன என்கிறார்கள். போயஸ் கார்டனுக்குள் சென்றவர்களுக்கு அந்த மாளிகையின் பிரம்மாண்டம் தெரியும் மிகப்பெரிய நீச்சல் குளம், வாசலில் மிகப்பெரிய பலா மரம், அழகிய பூந்தோட்டம், 20க்கும் மேற்பட்ட அறைகள் அவற்றில் ஒவ்வொரு அறையிலும் ஏசி என வெளித் தோற்றமே காண்போரை மிரள வைக்கும். வீட்டின் பிரதான நுழைவுக் கதவே கோயில் கதவு போலத் தான் இருக்கும்.

    முதல்வரான பின்னர் கெடுபிடி

    முதல்வரான பின்னர் கெடுபிடி

    1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர் குடியிருந்த பகுதி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய கருப்பு பூனைப் படை இவருக்குப் பாதுகாப்பு அளிக்க வந்த பிறகு பெரிய அளவுக்கு இந்தப் பகுதிக்குள் கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டன. அவர் வீட்டு முன்பாக தான் அமைச்சர்கள் வரிசையாகக் காத்திருப்பார்கள். போயஸ்கார்டன் இரும்பு கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    சசிகலா வாழ்ந்த இல்லம்

    சசிகலா வாழ்ந்த இல்லம்

    ஜெயலலிதா உடன் நட்பான பின்னர் 25 ஆண்டுகளுக்கு மேல் சசிகலா இந்த வீட்டில்தான் வாழ்ந்திருக்கிறார். சசிகலா மட்டுமல்லாது இளவரசி, விவேக் உள்ளிட்டோருக்கும் இந்த விலாசத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை இருக்கின்றன. ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் என்று சொல்லும் ஜெ. தீபாவிற்கோ, தீபக்கிற்கோ இந்த விலாசத்தில் எந்த அடையாள அட்டையோ ரேஷன் கார்டோ இல்லை.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் சசிகலாவும் அவரது உறவினர்களும் வேதா நிலையத்தில் இருந்தனர். ஜெயலலிதா இறப்பிற்குப் பின் இரவில் இந்த வீட்டினுள் இருந்து அமானுஷ்ய சப்தங்கள் எழுவதாக ஒரு தகவல் பரவியது. இங்கே தங்கியிருந்த பலரும் வேதா இல்லத்தை காலி பண்ணிவிட்டு கிளம்பினர்.

    அரசுடமையாக்கப்பட்ட வேதா இல்லம்

    அரசுடமையாக்கப்பட்ட வேதா இல்லம்

    சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன. வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

    வழக்கு தொடுத்த ஜெ.தீபா

    வழக்கு தொடுத்த ஜெ.தீபா

    தமிழக அரசு, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக ரூ.68 கோடி நீதிமன்றத்தில் செலுத்தி வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நினைவு இல்லத்தைத் திறக்க தடை கேட்டு அவசர வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், வழக்கு முடியும் வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி 28ஆம் தேதி அரசுடமையாக்கப்பட்ட வேதா நிலையத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    அரசுக்கு அதிகாரமில்லை

    அரசுக்கு அதிகாரமில்லை

    தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என ஜெ.தீபா, தீபக் வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    ஹைகோர்ட் தீர்ப்பு

    ஹைகோர்ட் தீர்ப்பு

    நவம்பர் 24,2021 இன்று வேதா நிலைய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது.வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்கிறோம். வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு ?.கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

    English summary
    Deepa and Deepak have legally owned the Veda house where Jayalalithaa lived following a lawsuit. They have proved that the house bought by the grandmother is for the grandchildren. Deepa and Deepak have won the legal battle.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X