அவர் எது பண்ணாலும் ஆராய்ச்சி பண்றாங்க.. அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்கு ஆதரவாய் வந்த கார்த்தி சிதம்பரம்!
சென்னை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டத்தில் கையில் தேசியக் கொடியை ஏந்த பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மறுத்த வீடியோ எதிர்க்கட்சியினரால் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்காணிஸ்த்கான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை தொடர் 2022 துபாய் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ஏ அணியில் இடம் பெற்றுள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று போட்டி நேற்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அரசியலை போலவே கிரிக்கெட்டிலும் இரு அணிகள் மோதும் போட்டி என்றாலே அனல் பறக்கும் என்பதால் இந்த போட்டி வழக்கம் போலவே எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது.

இந்தியா பாகிஸ்தான்
இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய பவுலர்கள் மிரட்டினர். ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார்,அர்ஷிப் சிங் உள்ளிட்டோரின் தீவிர தாக்குதலை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹர்திக் பாண்ட்யா
இதை அடுத்து களம் இறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றினாலும் ஓரளவுக்கு தாக்கு பிடித்த விராட் கோலி 35 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சூர்ய குமார் யதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி காரணமாக 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்தும் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது இந்தியா. பேட்டிங் பௌலிங் என இரு தரப்பிலும் மாஸ் காட்டிய ஹர்திக் பாண்டியா வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்தார் மேலும் கோலி, ஜடேஜா , புவனேஸ்வர் குமார், அர்ஷிப் சிங் ஆகியோரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

ஜெய் ஷா
தான் சந்தித்த பந்தை சிக்ஸருக்கு ஹர்திக் பாண்டியா விரட்டி பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில் மைதானமே உற்சாகத்தில் ஆழ்ந்தது. தொடர்ந்து கேலரியில் நின்று கொண்டிருந்த பிசிசிஐ தலைவரும் மத்திய அமைச்சர் அமைச்சரின் மகனுமான ஜெய் ஷா உற்சாகமாக காணப்பட்டார். அப்போது ஒருவர் தேசிய கொடியை அவர் கையில் கொடுக்க வந்தபோது அதனை ஜெய் ஷா வேண்டாம் என மறுத்தார் .தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் தெலுங்கானா ராட்சச சமிதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம்
வேறு யாராவது இதே செயலை செய்து இருந்தால் தேச விரோதி என பாஜக முத்திரை குத்தி இருக்கும் எனவும் 'பேரரசரின் மகன்' என்பதால் ஜெய் ஷா மீது எந்த விமர்சனங்களும் வைக்கப்படவில்லை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் எம்பி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெய் ஷாவுக்கு ஆதரவு
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஜெய்ஷாவுக்காக நான் வருந்துகிறேன். அவர் யாருடைய மகன் என்பதற்காகவே என்ன செய்தாலும் அல்லது செய்யாமலேயே இருந்தாலும் ஆராயப்படுகிறது. பொது நபருடனான அவரது குடும்ப உறவின் காரணமாக அவரது அனைத்து சாதனைகள் நற்சான்றிதழ்கள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன' என பதிவிட்டுள்ளார். அதாவது அமித் ஷாவின் மகன் என்பதற்காகவே ஜெய் ஷா மீது இதுபோன்ற சர்ச்சைகள் முன்வைக்கப்படுகிறது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

நிர்வாகிகள் குழப்பம்
மத்திய பிரதேச காங்கிரஸ் முதல் டெல்லி தேசிய தலைவர்கள் வரை பலரும் ஜெயிஷாவை விமர்சித்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் கார்த்தி சிதம்பரம் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் செயலை விமர்சித்து வரும் நிலையில். தற்போது அமித் ஷாவின் மகனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications