"திராவிட காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ" முதல்வராக ஓராண்டு! முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய வைரமுத்து!
சென்னை : தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள் எனவும், திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
குறிப்பாக தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்தது.

ஓராண்டு நிறைவு
இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்றுடன் அவர் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் திமுக ஆட்சியையும் தமிழக முதல்வரையும் பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அறிக்கைகள் மூலமாகவும் நேரிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

முதல்வருக்கு வாழ்த்து
திமுக ஆட்சியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு தாயார் தயாளு அம்மாவிடம் முதல்வர் ஆசி பெற்றார். தொடர்ந்து,மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்த புறப்பட்ட நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து சென்னை மெரினா நோக்கி செல்லக்கூடிய பேருந்தில் ஏறி முதல்வர் ஆய்வு செய்து, மகளிரிடம் இலவச பயண திட்டம் குறித்து உரையாடினார். பின்னர் கருணாநிதி நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்று தற்போது மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கவிஞர் வைரமுத்து
இந்நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள் எனவும், திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, " முதலமைச்சரே! பிறையில் முழுநிலா உறைவது போல உன் ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள்

தெம்புள்ள யானை நீ!
என்றாலும் எதிர்ப்பு, கொம்புள்ள யானையும் கொள்கையுள்ள தலைவனுமே குறிவைக்கப்படுகிறார்கள். கொம்பு மட்டுமா திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ பேனாவோடு புதைக்கப்பட்ட கலைஞர் உனக்கொரு கவி வரைவார்" என பதிவிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications