சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலுக்கிய கேரள நரபலி.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட தமிழ் பெண்.. உடல் இங்கே வரனும்: அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட தருமபுரியை சேர்ந்த பெண்ணின் உடலை தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ரயில்நிலையத்தில் பத்மா மற்றும் ரோஸ்லி ஆகியோர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து இருக்கிறார்கள். இதில் பத்மா தருமபுரியை சேர்ந்த தமிழ் பெண். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பத்மா திடீரென மாயமாகி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் அவரது தோழி ரோஸ்லியும் காணாமல் போனார். இது அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஒரேபோடு.. ‛‛ஒன்றியம்’’னு சொன்னா தான் பாஜகவுக்கு கோபம் வரும்.. அழுத்திய உதயநிதி ஸ்டாலின்.. பின்னணிஒரேபோடு.. ‛‛ஒன்றியம்’’னு சொன்னா தான் பாஜகவுக்கு கோபம் வரும்.. அழுத்திய உதயநிதி ஸ்டாலின்.. பின்னணி

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

காணாமல்போன இரண்டு பெண்களின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது அவர்கள் முகமது ஷாபி என்ற நபரிடம் பேசி வந்தது தெரியவந்தது. இந்த இரண்டு பெண்களும் முகமது சாபி என்ற இளைஞரிடம் பேசியது பின்னர் சிசிடிவி கேமராக்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டது. சாபியை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில்தான் அதிரவைக்கும் தகவல் கிடைத்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

பகவான் சிங் மற்றும் லைலா ஆகிய தம்பதிக்காக 2 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட தம்பதியின் வீட்டிற்கு அருகில்தான் பத்மாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்தது. ரோஸ்லியின் உடல் எரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் நரபலி கொடுக்கப்பட்டது எப்படி என்ற விளக்கத்தையும் சாபி போலீசாரிடம் அளித்திருக்கிறார்.

போலீஸ் விளக்கம்

போலீஸ் விளக்கம்

தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சாபியை சைக்கோ என்றும் பாலியல் ஈடுபாடு அதிகம் உடையவர் என்றும் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட 2 பெண்களின் அந்தரங்க உறுப்புகளும் கத்தியால் குத்தப்பட்டு அவர்களின் கழுத்து அறுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து இருக்கிறார். பகவான் சிங்கின் மனைவி கொல்லப்பட்ட பெண்ணின் சதையை சாப்பிட்டேன் என்று கூறியதாக கொச்சி காவல் ஆணையர் நாகராஜு தெரிவித்துள்ளார்.

மஞ்சள் செடி வளர்ப்பு

மஞ்சள் செடி வளர்ப்பு

இந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே பத்மாவின் உடலை ஆட்டுக்கறிபோல் கூறுபோட்டு அதன் மீது உப்பை தூவிய அரக்கர்கள், குழியில் போட்டு புதைத்து இருந்ததாகவும், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மஞ்சள் செடிகளை அதன் மீது நட்டதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அன்புமணி கோரிக்கை

அன்புமணி கோரிக்கை

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அன்புமணி, "கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது பிள்ளைகள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் இரட்டை வேதனையில் தவிக்கின்றனர்.

உடலை தர வேண்டும்

உடலை தர வேண்டும்

கோட்டயம் அரசு மருத்துவமனையில் பத்மா உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவு முறையை உறுதி செய்ய அவரது மகன்களிடம் மரபணு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பிள்ளைகளிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க கேரள அரசு மறுக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Human sacrifice of 2 women in Kerala has come to light and caused shockwaves among country. PMK president Anbumani Ramadoss has requested to take steps to bring the body of the murdered woman from Dharmapuri to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X