சவால் விடுகிறேன்.. தமிழகத்தில் கட்டாய மதமாற்றமில்லை என முதல்வர் கூற முடியுமா?.. குஷ்பு
சென்னை: தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லை என முதல்வர் ஸ்டாலினால் கூற முடியுமா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் சவால் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், வி.பி துரைசாமி, கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது குஷ்பு பேசுகையில் எல்லோரின் வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். இழந்தவர்களுக்கு மட்டும்தான் வலியும் வேதனையும் தெரியும். இதுவரை இந்த தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?

கட்டாய மதமாற்றம்
மதம் மாற்றம் குறித்து இறந்த குழந்தையே வீடியோ வாக்குமூலம் கொடுத்தும் இதுவரை ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதுதான் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் விடியலா? எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் எங்கே? அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்றால் அந்த குழந்தை பேசியது பொய்யா?

காங்கிரஸ் கட்சி
சிறுமியின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியே கிடையாது. மாநில தலைவர் அண்ணாமலையின் துணிச்சல், தைரியம் தெரிய வேண்டுமானால் கர்நாடகா சென்று கேளுங்கள். அவரை சும்மாவா தமிழக பாஜக தலைவராக நியமித்தோம். நியாயத்திற்கு மட்டுமே பாஜகவினர் போராடுபவர்கள். அவர்களுக்கு துணிச்சல் எப்போதுமே உண்டு.

தஞ்சை எஸ்பியை நீக்க வேண்டும்
தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று யாராவது கூறமுடியுமா? தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என்று முதல்வர் அறிக்கை வெளியிடுவாரா என கேள்வி எழுப்பினார். தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications