சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஷ்புவால் திமுக-காங்.-க்கு இம்மி சேதாரமும் இருக்காது-பாஜகவுக்கும் அம்மஞ்ஜல்லி பிரயோசனமும் கிடையாது!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை குஷ்பு விலகியதால் திமுக- காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் துளி சேதாரமும் ஏற்படப்போவதில்லை; அதேபோல் பாஜகவுக்கும் வாக்குகள் வந்து குவிந்துவிடப் போவதும் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திமுக, காங்கிரஸ் இப்போது பாஜக என ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகை குஷ்பு, கட்சிகள் மாறிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் எந்த ஒரு கட்சியிலும் குஷ்புவுக்கு என தனித்த வாக்கு வங்கி எதுவுமே இல்லை.

இப்படி நடக்குமா.. தமிழக பாஜக தலைவர் + முதல்வர் வேட்பாளராவாரா குஷ்பு.. பெரும் எதிர்பார்ப்பு! இப்படி நடக்குமா.. தமிழக பாஜக தலைவர் + முதல்வர் வேட்பாளராவாரா குஷ்பு.. பெரும் எதிர்பார்ப்பு!

குஷ்புவுக்கு வாக்கு வங்கி கிடையாது

குஷ்புவுக்கு வாக்கு வங்கி கிடையாது

குஷ்புவைப் பொறுத்தவரை நடிகை. அதுவும் ஒருகாலத்தில் கொண்டாடப்பட்ட நடிகை என்கிற அளவில் கட்சிகள் கூட்டம் சேர்க்கத்தான் அவரை பயன்படுத்தின. அவரும் தம்முடைய இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியாக அடைக்கலமாகிக் கொண்டிருக்கிறார். இதனைத் தவிர குஷ்புவுக்கு ஒரு வாக்கு வங்கி என்கிற பேச்சுக்கு இடமே இல்லை.

திமுக அணிக்கு சேதாரம் இல்லை

திமுக அணிக்கு சேதாரம் இல்லை

இதனால் தற்போது குஷ்பு பாஜகவுக்கு தாவிவிட்டதால் திமுக- காங்கிரஸ் அணிக்கு துளி கூட சேதாரம் இருக்காது. வேண்டுமானால் குஷ்புவின் ஒற்றை வாக்கு கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதாக மட்டும் கொள்ளலாம். அதுவும் கூட நீண்டகாலமாக பிரதமர் மோடியை ஆதரித்து பேசி வருகிற குஷ்பு, ஒருவேளை காங்கிரஸில் நீடித்திருந்தாலும் அந்த கூட்டணிக்குதான் வாக்கு செலுத்தியிருப்பார் என்று சொல்லவும் முடியாது.

பாஜக - குஷ்பு நீண்டகால மோதல்

பாஜக - குஷ்பு நீண்டகால மோதல்

இன்னொரு பக்கம் குஷ்புவின் வருகையால் பாஜகவுக்கும் கூட வாக்கு வங்கி அளவில் எந்த பயனுமே இல்லைதான். பாஜகவைப் பொறுத்தவரை குஷ்பு என்கிற பிரபலத்தை பயன்படுத்த ஒப்புக் கொண்டிருக்கிறது. அதுவும் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக பாஜக தொண்டர்களால் மிக நீண்டகாலமாக மிக மோசமான வசவுகளால் விமர்சிக்கப்பட்டவர் குஷ்பு. நேற்று வரை ரூ2 டிவீட்டுக்காரர்கள் என்றுதான் பாஜகவினரை கிண்டலடித்து கொண்டிருந்தார் குஷ்பு.

பாஜகவினர் அதிருப்திக்குதான் வாய்ப்பு அதிகம்?

பாஜகவினர் அதிருப்திக்குதான் வாய்ப்பு அதிகம்?

கட்சி தலைமை சேர்த்துக் கொண்டுவிட்டதாலேயே குஷ்புவை தமிழக பாஜகவினர் தலையில் தூக்கி வைக்கப் போவதும் இல்லை. இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக என்றாலே எட்டிக்காயாகத்தான் பார்க்கின்றனர் பொதுமக்கள். அதனால் குஷ்புவை ஒருநடிகையாக பார்த்தவர்கள் கூட இனி அவரை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் போவதற்குத்தான் அதிக வாய்ப்பு. குஷ்பு வருகையால் பாஜக தொண்டர்கள் கூட வெறுப்படைந்து போகத்தானே வாய்ப்புகள் அதிகமே தவிர ஒரு ஓட்டு கூட விழுந்துவிடாது என்பதும் கள யதார்த்தம்.

English summary
Actor Khushbu's Shift to BJP will not dent in DMK-Congress vote Bank.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X