சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூர்யா வீட்டு வாசல்ல நிற்பதும் போலீஸ்தான்.. மாஜி அதிகாரி வீடியோவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் சப்போர்ட்

கலியமூர்த்தி வீடியோவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: இப்ப கூட எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையில் சூர்யா வீட்டிற்கு காவலுக்கு நிற்பது போலீஸ்காரர்கள் தான்.. நாளைக்கு அவர் வெளியில் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பது இதே போலீஸ்தான்... அவரது படத்தை தியேட்டரில் போட்டாலும் அதுக்கும் பாதுகாப்பு கொடுப்பது போலீஸ்தான்... எங்களை நீங்கள் திட்டினாலும்,எங்களை நீங்கள் அடிச்சாலும்,எங்களை நீங்கள் மிதிச்சாலும் பாதுகாப்பு கொடுப்போம் தயவு செய்து எங்களை புரிந்து கொள்ளுங்கள்" என்று மாஜி போலீஸ் அதிகாரியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி, ஜெய்பீம் பட குழுவிற்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.. அது குறித்து ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார்.

அதில் உள்ள சுருக்கம் இதுதான்: "மேற்கு மண்டலத்தை சேர்ந்த நாங்க, சூர்யா குடும்பத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். அவர் மீது, தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சியோ அல்லது வெறுப்போ இல்லை.. இந்த படம் போலீஸ்துறை மீதான மரியாதையை குலைப்பது போல் சம்பவம் உள்ளது.

சென்னையில் ஓமிக்ரான் வைரஸை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு கூடம்.. மக்களுக்கு மா.சு முக்கிய வேண்டுகோள் சென்னையில் ஓமிக்ரான் வைரஸை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு கூடம்.. மக்களுக்கு மா.சு முக்கிய வேண்டுகோள்

 ஜெயிலர்

ஜெயிலர்

ஜெயிலர், கைதிகளை ஜாதி அடிப்படையில் பிரிக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. போலீசுக்கு பணம் கொடுத்து கைதிகளை வாங்குவது போன்ற சம்பவம் காட்டப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் இது வரையில் நடந்தது இல்லை. காவல்துறை என்பது தன்னை அகழ்ந்தாரை தாங்கும் பூமி . என்னை இகழ்ந்தாலும் , மேடையில் என்னை திட்டிக்கொண்டிருந்தாலும் உங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டே இருப்போம். இதுதான் போலீஸ் டிபார்ட்மென்ட். போலீஸ் துறையின் மொராலிட்டி கெட்டு போயிட்டது என்றால் போலீசின் இமேஜ் ஸ்பாயில் ஆவது மட்டுமல்ல.

 பூமிநாதன்

பூமிநாதன்

எங்களுக்கு ஒருவருக்கொருவர் என்ன ஜாதி என்பது தெரியாது.. ஆனால், இந்த படத்தின் மூலம் போலீஸ் துறைக்குக்குள் ஜாதி வேறுபாட்டு பிரச்னை வந்து அதனால் அந்த துறை முடக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பும், பொதுமக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்ற ஒரு காரணத்திற்காகத்தான் தவிர வேறும் எந்த காரணமும் இல்லை. ஆடு திருடியவனை பிடிக்க சென்ற போலீஸ் பூமிநாதன் கொலை செய்யப்பட்டார். அவர் விட்டுட்டு போயிருந்தால் டிபார்ட்மென்ட் கேட்க போவதில்லை. குடும்பத்திற்கு அவர் இருந்திருப்பார். இன்று அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ள கடமைபட்டுள்ளோம்.

சட்டவிரோதம்

சட்டவிரோதம்

போலீஸ் உணர்ச்சி வசப்படுவதால் நிறைய போலீசார் ஜெயிலுக்கு போயிருக்கின்றனர். பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பங்கள் அழிந்து போய் உள்ளது. சாகிறவனுக்கும் போலீசுக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. அவன்யாரு என்பது அதுக்குமுன்னாடி வரைக்கும் போலீஸ் அதிகாரிக்கு தெரியாது. போலீஸ் அதிகாரி யார் என்பது அந்த குற்றவாளிக்கு தெரியாது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இப்ப கூட எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையில் அவரது வீட்டிற்கு காவலுக்கு நிற்பது போலீஸ்காரர்கள் தான். நாளைக்கு அவர் வெளியில் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பது இதே போலீஸ்தான். அவரது படத்தை தியேட்டரில் போட்டாலும் அதுக்கும் பாதுகாப்பு கொடுப்பது போலீஸ்தான். எங்களை நீங்கள் திட்டினாலும், எங்களை நீங்கள் அடிச்சாலும்,எங்களை நீங்கள் மிதிச்சாலும் பாதுகாப்பு கொடுப்போம் தயவு செய்து எங்களை புரிந்து கொள்ளுங்கள்.

 பாலியல் குற்றம்

பாலியல் குற்றம்

இது மட்டுமே எங்களது வேண்டுகோள்.. தப்பு செய்தால் எந்த போலீசாக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். பாலியல் குற்றம் என்பது கடுமையான குற்றம் .இதை புகார் எடுக்க மாட்டேன் என்று சொன்னால் அந்த போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்வதில் தப்பே கிடையாது" என்பன உட்பட மேலும் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்த வீடியோவைதான் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.. அத்துடன் மாஜி அதிகாரி கேட்பதில் என்ன தவறு? மிக சரியான கருத்துக்களையே முன்வைப்பதாகவும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்..

பேட்டிகள்

பேட்டிகள்

ஏற்கனவே இந்த படத்தை பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் நிறைய பதிவுகளை பதிவிட்டுள்ளார்.. முதலில் படத்தை பார்த்துவிட்டு ஒரு கருத்து பதிவிட்டிருந்தார்.. பிறகு சர்ச்சைகள் பெருகியதும் வேறு ஒரு பதிவு போட்டிருந்தார்.. படத்தில் சாதி அல்லது மதம் தொடர்பான எதையும் நான் உணரவில்லை என்று முதலில் சொல்லி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்..

சர்ச்சை

சர்ச்சை

பிறகு, "திரைப்படம் மனதைத் தொட்டது & உண்மைச் சம்பவம் என்று நம்பினேன்... சர்ச்சைகள் எழுந்தபின் நான் ஆய்வு செய்து பார்த்தபோது தான் தெரிந்தது. உண்மை சம்பவம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் நின்றது தான் என்று! தயாரிப்பாளர்கள் தங்கள் கதைக்கு ஏற்றவாறு கையாண்டுள்ளனர்! தவறான விளக்கத்தை ஏற்க முடியாது" என்று தன்னுடைய கருத்தில் இருந்து நிலைப்பட்டு, அதற்கு விளக்கமும் தெரிவித்திருந்தார்.

 ராஜாக்கண்ணு

ராஜாக்கண்ணு

அதுமட்டுமல்ல, "உண்மையாக கடலூரில் ராஜாக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம். ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என்று தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தியின் கருத்தை தாம் ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

English summary
Lakshmi Ramakrishnan gives support to Ex Police Officer Kalihyamurthy IPS viral video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X