நேர்மையாக மட்டும் எடுத்திருந்தால்.. ஜெய்பீம் வேற லெவல் படம்.. லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
சென்னை: ஜெய் பீம் படத்தின் உண்மைக் கதையை நேர்மையாக எடுத்திருந்திருக்கலாம். ஆனால் படம் எடுத்தவர்கள் அதை செய்யவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் ரிலீஸான ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் காட்டப்பட்டதாக வன்னியர் சங்கத்தினர் படக்குழுவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அது போல் உண்மைக்கதையில் இன்ஸ்பெக்டரின் பெயர் வேறு மதத்தினரின் பெயராக இருக்கும் நிலையில் படத்தில் அவருக்கு குருமூர்த்தி என சூட்டப்பட்டுள்ளது. இதற்கு காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வரவேற்பும்
இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்ட போதிலும் அதை ஏன் வைத்தீர்கள் என வன்னியர் சங்கம் கேட்டும் இதுவரை பதில் இல்லை என வன்னியர் சங்கத்தினர் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

காட்சியில் காலண்டர்
ஜெய்பீம் படத்தில் எதிர்ப்புக் கிளம்பிய அந்த காட்சியில் ஒரு காலண்டர் குறிப்பிட்ட சமூகத்தினரை சேர்ந்தது என்பது எங்களுக்கு தோன்றவில்லை என இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் குருமூர்த்தி கேரக்டர் குறித்து அவர் எதையும் கூறவில்லை.

இயக்குநர்
இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜெய்பீம் படத்தின் உண்மை கதை நேர்மையாக இயக்கியிருந்தால் அந்த படம் சிறந்த உத்வேகமளிக்கக் கூடிய படமாக இருந்திருக்கும். ஆனால் உண்மைக் கதைக்கு புறம்பாக எடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அராஜகம்
உண்மையாக கடலூரில் ராஜக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம்.
Recommended Video

பாதிப்பு
ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது போல் நிறைய பேர் ஜெய்பீம் குறித்து அவர்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications