• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊதிட்டாங்க சங்கு.. அதனால் நான் ஏற்கவில்லை பங்கு.. ரணகளத்திலும் டிஆருக்கு கிளுகிளுப்பை பாருங்களேன்!

Google Oneindia Tamil News

Recommended Video

  கார்னர் சீட் காதலர்களை கலாய்த்த TR | TR PRESS MEET | FILMIBEAT TAMIL

  சென்னை: "இந்த தேர்தல் முடிவு அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு. அதனால்தான் நான் ஏற்கவில்லை பங்கு.. ரஜினி, கமலே தேர்தலில் போட்டியிட யோசிக்கும்போது நான் யோசித்துதான் முடிவெடுகக் வேண்டும்.. எங்கள் கட்சி தொண்டர்களும் இந்த தேர்தலில் நிற்க விரும்பினார்கள். ஆனால், நான் தான் ஓட்டு கேட்டு எல்லாம் வரமுடியாதுன்னு சொல்லிவிட்டேன்" என்று சகலகலா கலைஞன் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

  சென்னை தியாகராய நகரில் உள்ள தன் வீட்டில் இன்று டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

  "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்திற்கான திரைப்பட வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பதவி ஏற்றுக் கொண்டேன். தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி. இதற்கு முன் நடிகராக, அரசியல் கட்சி தலைவராக இருந்த டி.ராஜேந்தர் வேறு, இப்போ இருக்கிற டி.ராஜேந்திரன் வேற.

  ஆளும் கட்சி மீது மக்கள் பெரும் வெறுப்பில் உள்ளனர்.. எல்லோருக்கும் மிக்க நன்றி.. ஸ்டாலின் நெகிழ்ச்சி ஆளும் கட்சி மீது மக்கள் பெரும் வெறுப்பில் உள்ளனர்.. எல்லோருக்கும் மிக்க நன்றி.. ஸ்டாலின் நெகிழ்ச்சி

  ஜிஎஸ்டி வரி

  ஜிஎஸ்டி வரி

  சினிமாவில் 40-வது வருஷத்தில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படம் வந்தாலும் சிக்கல். அன்று வர்த்தகசபை வாசலில் நின்று ஜிஎஸ்டி வரி எதிர்த்து போராடினேன். மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்த பிறகு மாநில அரசு எதற்காக கேளிக்கை வரியை விதிக்கிறது என்று கேள்வியும் எழுப்பினேன்.. இந்திய அளவில் இல்லாதவாறு 8 சதவீதம் கேளிக்கை வரி மக்களை வாட்டி வதைக்கிறது.

  கேளிக்கை வரி

  கேளிக்கை வரி

  தட்டுக்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னது போல, தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சரையும் கேளிக்கை வரி தொடர்பாக சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கின்றோம். கமல், விஜய், அஜித் படங்களுக்கும் டிக்கெட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அது தான் என்னுடைய நோக்கம். தமிழ் சினிமாவை மறுகட்டமைப்பு செய்ய என்னால் மட்டும் முடியாது.

  மகனும் தோல்வி.. மகளும் படுதோல்வி... பெரும் விரக்தியில் அன்வர் ராஜா.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!மகனும் தோல்வி.. மகளும் படுதோல்வி... பெரும் விரக்தியில் அன்வர் ராஜா.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்!

  நோக்கம் இல்லை

  நோக்கம் இல்லை

  தமிழ் ராக்கர்ஸ் அழித்துவிடுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள். தமிழ் சினிமாவின் அடிப்படை பிரச்சனைகளை களைந்தாலே போதும். அதேபோல, தமிழக அரசு மற்றும் திரைப்படத்துறையில் இருப்பவர்களை எங்களை எதிராகவும், உதிரியாகவும் எண்ணக்கூடாது. திரைப்பட திரையரங்குகள் மூட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை.

  அதிமுக

  அதிமுக

  இப்பேதாது வெளிவந்து கொண்டிருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு தங்களுக்கு விருப்பமானவர்களைதான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்போது உள்ளாட்சி தேர்தலில் முடிவுகளில் ஆளும் கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களை வென்று வருகிறது. நம் மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர் என்பது தெரிகிறது.

  எச்சரிக்கை மணி

  எச்சரிக்கை மணி

  இந்த தேர்தல் முடிவு அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு. அதனால்தான் நான் ஏற்கவில்லை பங்கு. இந்தத் தேர்தல் முடிவு என்னையும் சிந்திக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் எங்கள் கட்சி தொண்டர்களும் நிற்க விரும்பினார்கள். நான் ஓட்டு கேட்டு வரமுடியாது என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன்.

  ரஜினி, கமல்

  ரஜினி, கமல்

  ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு பணம் கொடுக்காமலேயே 3-வது இடம் வந்திருக்கிறார். ரஜினி, கமலே யோசிக்கும் போது நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்து தான் முடிவு செய்ய வேண்டும். அரசியலில் நேரம் மட்டும் தான் ஜெயிக்கும். அதிர்ஷ்டம் கண்டிப்பாக வேண்டும்" என்றார்.

  English summary
  local body election result: tamil film director t rajendar commented on election result and criticized aiadmk
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X