வெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
Recommended Video
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.
இன்று லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.

இந்த தேர்தலுக்காக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள். அதிகாலையில் இருந்து முக்கிய நபர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். காலை 9.05 மணி அளவில் அவர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தார்.

அவருடன், மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்களிக்க வந்திருந்தார். 9 மணிக்கு பிறகு ஸ்டாலின் வந்ததால் வாக்குப்பதிவு மையத்தில் பெரிய அளவில் கூட்டம் நிலவியது. இதனால் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் காத்து இருந்தார்,
வெயிலில் 20 நிமிடம் வரை ஸ்டாலின் லைனில் காத்து இருந்தார். அதன்பின் 9.25 மணிக்கு வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஒட்டு மொத்த வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். ஜனநாயக அடிப்படையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க வழிவகுக்க வேண்டும்.
தவறாமல் வாக்காளர்கள் ஓட்டளிக்க வேண்டும். பிற தேர்தல்களை விட இது முக்கியமான தேர்தல். தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க மக்கள் சரியாக வாக்களிக்க வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications