Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைகிறது - 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நவம்பர் 17ஆம் தேதி மேற்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் இதன் காரணமாக நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை தொடங்கி வட மாவட்டங்கள் மட்டுமல்லாது தென் மாவட்டங்களும் பெருவெள்ளத்தில் சிக்கியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. சாலைகள் சிதைந்து போயுள்ளன. வாழைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார். காலை 10 மணிக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிடும் அவர், 11.30 மணிக்கு பேச்சிப்பாறை அணை , பிற்பகல் 12.40க்கு மனவாளகுறிச்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிடுவதுடன், மதியம் 1.30மணிக்கு, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு உண்கிறார். இதையடுத்து மாலை 3 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஆரஞ்ச் அலர்ட்

ஆரஞ்ச் அலர்ட்

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

இதனிடயே வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

நவ.18 வரை கனமழை

நவ.18 வரை கனமழை

நவம்பர் 17ஆம் தேதி மேற்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் மழை

தென்மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    மழைவெள்ளத்தை இப்படிதான் Enjoy பண்ணனும்.. கொண்டாடி தீர்த்த குமரி மக்கள்
    கனமழை

    கனமழை

    கோவை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+