கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ
சென்னை: தமிழக அரசியல் களம் தகித்து கொண்டிருக்கிறது.. வியூக திட்டங்கள் மும்முரமாகி கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படியிருக்கும்போது, கடந்த காலங்களை விட இந்த முறை பாஜக அதிக இடங்களை பெற்றுள்ளதும், அக்கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையாக அல்லது கூடுதலாக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் பாஜக ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்ததாக தெரிகிறது.. இப்போது இறுதியில் 27 தொகுதிகள் என்ற உடன்பாட்டிற்கு 2 கட்சிகளும் வந்துள்ளன.

அதிமுக கோட்டை
இந்த தொகுதிப் பங்கீட்டில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்னவென்றால், சிறிய கட்சிகளாகக் கருதப்படும் பாமக மற்றும் அமமுக போன்றவற்றுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைத்துள்ளன. அதாவது பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் அதிமுக, தன்னுடைய கூட்டணியை வலுவான தளம் கொண்ட ஒரு கூட்டணியாக மாற்ற முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.
பாஜக கேட்ட நம்பர்
பாஜகவை பொறுத்தவரை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. நாகர்கோவில், நெல்லை, மொடக்குறிச்சி மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் கிடைத்த வெற்றி, அந்தக் கட்சிக்குத் தமிழகத்தில் ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருந்தது.. அதனால்தான் அந்த தொகுதிகளை மனதில் வைத்தே இப்போதும் கூடுதலான சீட் கேட்க ஆரம்பித்தது.
அதன்படியே 7 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது அக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த முறை கூடுதல் தொகுதிகளை அங்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளது.
தென் மாவட்டங்கள் பாஜக பலம்
கன்னியாகுமரி குமரி, நெல்லை, தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் பாஜக தனது முழு பலத்தையும் பிரயோகிக்க திட்டமிட்டுள்ளதாம்..
விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் போன்ற கன்னியாகுமரி மாவட்டத் தொகுதிகளிலும், ராதாபுரம், வாசுதேவநல்லூர், தென்காசி அல்லது ஆலங்குளம் போன்ற நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத் தொகுதிகளிலும் பாஜகவின் வேட்பாளர்கள் களம் காண்பது உறுதியாகியுள்ளது. இது தவிர, விருதுநகர் மற்றும் மதுரை வடக்கு போன்ற தொகுதிகளும் பாஜகவின் டார்கெட்டில் உள்ளன.
இந்த தொகுதி ஒதுக்கீடு தென்மாவட்ட பாஜகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை தக்கவைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல், கூடுதலாகக் கிடைத்துள்ள தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டசபையில் தனது பலத்தை இரட்டை இலக்கத்தில் உயர்த்த வேண்டும் என்பதே பாஜகவின் தற்சமயம் மெயின் டார்கெட்டாக உள்ளது.
27 தொகுதிகளும் சக்சஸ்?
அதே சமயம், அதிமுக தனது வாக்கு வங்கியைச் சிதறவிடாமல் இருக்கவும், கூட்டணிக் கட்சிகளின் பலத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியை வீழ்த்தவும் இந்த வியூகத்தை வகுத்து வருவதாக தெரிகிறது.
தமிழக அரசியலில் தென்மாவட்டங்கள் எப்போதும் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றன. அங்கு பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் இடங்கள், அந்தப் பிராந்தியத்தில் ஒரு மும்முனைப் போட்டியை அல்லது பலப்பரீட்சையை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த 27 தொகுதிகளும் பாஜகவின் தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான களமாக அமையப்போவதால், திமுக என்ன செய்ய போகிறது? விஜய், சீமான் என்ன செய்ய போகிறார்கள்? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications