மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது- வைரமுத்து
சென்னை: மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இன்றும் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள்
— வைரமுத்து (@Vairamuthu) February 13, 2021
பட்டாசுகளை வெடிப்பதுபோய் -
பட்டாசுகள்
மனிதர்களை வெடிப்பது துயரமானது.
அதனினும் பெருந்துயரம்
மனித உயிர்களின் விலை
சில லட்சங்கள் ஆகிப்போவது.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மனிதர்கள்
பட்டாசுகளை வெடிப்பதுபோய் -
பட்டாசுகள்
மனிதர்களை வெடிப்பது துயரமானது.
அதனினும் பெருந்துயரம்
மனித உயிர்களின் விலை
சில லட்சங்கள் ஆகிப்போவது.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.