மகளிர் உரிமை தொகை..உங்களுக்கு இந்த சந்தேகங்கள் எல்லாம் இருக்கா? ரூ.1000 வாங்க சூப்பர் வழி! விடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சேர புதிய வாய்ப்புகள், விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பெண்களிடமும் குடும்பத்தினரிடமும் பல சந்தேகங்கள், கேள்விகள் நிலவுகின்றன. அதற்கான விளக்கங்கள், பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

Tamil Nadu Government Notification ration magalir urimai thogai

எப்போது விரிவாக்கம் செய்யப்படும்?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுக்க இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 9000 இடங்களில் இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன.

எத்தனை பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வாய்ப்பு?

தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

குடும்ப தலைவிக்கு மட்டும் பணமா?

இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.

கடந்த முறை சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள் மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

2 பெண்கள் இருந்தால் யாருக்கு பணம்?

ஒரே வீட்டில் 2 பெண்கள் இருந்தால் அவர்கள் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசு விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் பலரும் தங்கள் ரேஷன் கார்டுகளில் மாற்றங்களை செய்ய தொடங்கி உள்ளனர். உதாரணமாக உங்கள் வீட்டில் ஒரு பாட்டி இருக்கலாம். அவர் பென்சன் வாங்கலாம்.

இதனால் வீட்டில் உள்ள மருமகளுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் ஏற்படலாம். இதனால் பலர் வீடுகளில் பாட்டிகளின் பெயர்களை ரேஷனில் இருந்து நீக்க தொடங்கி உள்ளனர். ஆனால் உங்கள் வீட்டில் எத்தனை பெண்கள் அரசின் பென்சன் வாங்கினாலும் பிரச்சனை இல்லை. அந்த ரேஷன் அட்டையில் குடும்ப தலைவி யாரோ அவருக்கே மகளிர் உரிமை தொகை வழங்க முடியும்.

அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பென்சன் பெறக்கூடாது. அதாவது குடும்ப தலைவியாக இருப்பவர் பென்ஷன் பெறக்கூடாது. அதேபோல் அவர்களின் கணவர் அரசு வேலை செய்ய கூடாது. மற்றபடி ஒரே வீட்டில் பல பெண்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் பென்ஷன் பெற்றாலும் குடும்ப தலைவி என்ற பெயரில் உள்ள பெண்ணுக்கு வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட்டது. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் வாங்கினாலும் கிடைக்காது. ஏனென்றால் ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின் போது பணம் தர கூடாது என்று முடிவு எடுக்கப்படும்.

இரண்டாவது ரேஷன் கார்டு இருந்தால் என்ன?

கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் இரண்டாவது ரேஷன் நீக்கப்படும். அரசு பென்ஷன் பெற்றால் அவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும். புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள். அரசு ஊழியர் அல்லாத பட்சத்தில் வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+