மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி... வடசென்னைக்கு குடிநீர் கிடைக்குமா?
மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகம், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை: மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல் 11.03.2022 காலை 10.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வடசென்னை பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஒரு நாள் குடிநீர் வராவிட்டாலே மக்கள் திண்டாடிப்போய்விடுவார்கள். மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எல்லாம் சென்னை கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகாலமாக பெய்து வரும் கடும் மழை வெள்ளம் காரணமாக சென்னையில் நீர் நிலைகள் எங்கும் நிரம்பி வழிகின்றன.
புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வட சென்னை பகுதிகளில் மூன்று நாட்களுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்நீர் சுத்திகரிப்பு பராமரிப்புப் பணி
இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல் 11.03.2022 காலை 10.00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வடசென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது

எந்தெந்த பகுதிகள்
மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர். கத்திவாக்கம், பட்டேல் நகம், வியாசர்பாடி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாற்று ஏற்படாக புழலில் அமைந்துள்ள 300 எம்.எஸ்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 08.03.2022 அன்று காலை 8.00 மணி முதல் 11.03.2022 காலை 10.00 மணி வரை குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடின்றி குடிநீர்
சென்னையில் கடந்த காலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது அதிக அளவில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதிக மழை வெள்ளம் காரணமாக ஏரிகள் நிரம்பி வழிவதால் வீடுகளுக்கு நேரடியாக தணணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது பராமரிப்பு பணி காரணமாக நேரடியாக வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் 3 நாட்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை
இதனால், பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
பகுதிப் பொறியாளர்/பகுதி-1 8144930901 திருவொற்றியூர், எர்ணாவூர்,கத்திவாக்கம்
பகுதிப் பொறியாளர்/பகுதி-2 8144930902 மணலி
பகுதிப் பொறியாளர்/பகுதி-3 8144930903 மாதவரம்
பகுதிப் பொறியாளர்/பகுதி-4 8144930904 வியாசர்பாடி, பட்டேல் நகர்
தலைமை அனுவலக புகார் பிரிவு 45674567 28451300
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications