சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடரும் அதிர்ச்சி.. மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2 முக்கிய நிர்வாகிகள் திடீர் ராஜினாமா

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமை அறிவிப்பதற்கு முன் கடலூரில் போட்டி என அறிவிப்பு - விலகலை ஏற்ற மநீம- வீடியோ

    சென்னை: மக்கள் நீதி மய்யம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    இதேபோல, மக்கள் நீதி மய்யம் நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜாவும் ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளது.

    லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தனித்து இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுக்க, தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

    குமரவேல் ஆரம்பித்தது

    குமரவேல் ஆரம்பித்தது

    இந்த நிலையில், நிர்வாகிகள் அவ்வப்போது கட்சியிலிருந்து விலகுவது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது அந்த கட்சிக்கு. முதலில் பெரிய அடி குமரவேல் ரூபத்தில் வந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்த குமரவேலுக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சி தலைமைக்கு குமரவேல் கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து குமரவேலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்தது.

    இது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்.. காங்.தேர்தல் அறிக்கை பற்றி ப.சி, மன்மோகன் சிங் பேச்சு!இது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்.. காங்.தேர்தல் அறிக்கை பற்றி ப.சி, மன்மோகன் சிங் பேச்சு!

    நடவடிக்கை

    நடவடிக்கை

    அதேநேரம் இதுபற்றி கமல்ஹாசனிடம் கேட்டபோது, நாங்களே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்தோம், அவரே விலகி விட்டார் என்றும், இன்னும் அவர் தொழிலதிபராகத்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார் என்றும், காட்டமாக கூறினார்.

    உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்

    கட்சிப் பொறுப்பு

    கட்சிப் பொறுப்பு

    இதன்பிறகு, மார்ச் மாதம் 3வது வாரத்தில், கடலூர் வடக்கு மண்டலப் பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் ஆகிய இருவரும் தாங்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.

    நெல்லை, விருதுநகர்

    நெல்லை, விருதுநகர்

    இந்த நிலையில், நெல்லை மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளார். நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜாவும் ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம், விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகம் என்பவரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்துள்ளார். அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கட்சி விரோத நடவடிக்கை இதற்கு காரணம் என்றும், அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

    English summary
    Many Makkal needhi maiam exicutives ran away from the party as now Nellai joins the list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X